ஞாயிறு, 2 ஜூன், 2019

#194 *கேள்வி: ஆண்டவர் ஏசு 25 டிசம்பரில் பிறந்தார் என்றால் 24வரை யார் ஆண்டவர்?

#194 *கேள்வி: ஆண்டவர் ஏசு 25 டிசம்பரில் பிறந்தார் என்றால் 24வரை யார் ஆண்டவர்?*

*பதில்:*
கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பலர் இன்னமும் இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருப்பதை காண்கிறோமே...

டிசம்பர் 25க்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கும் வேதாகமத்தின் அடிப்படையில் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த நாளை கத்தோலிக்கர்கள் தீர்மானித்து இயேசு பிறந்த நாளாக கற்பனையாக உட்புகுத்தியதை இந்த காலங்களில் அனைவரும் கிறிஸ்து பிறந்த தினமாக கொண்டாடுகின்றனர்.

அந்த நாளில் இவர்கள் காண்பிக்கும் Santa Claus என்கிற ஒரு நபர் வேதத்தில் அவர்களையே கண்டு பிடிக்க சொல்லுங்கள் !!  மாட்டு கொட்டகையில் 3 சாஸ்திரிகளையும் வேதத்தில் கண்டு பிடிக்க சொல்லுங்கள் !! இவையெல்லாம் சுத்தமான – வேதத்திற்கு புறம்பான கற்பனைகள்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் யார் ஆண்டவர் என்று கேள்வியை நானே கேட்டு பதிலளிக்கிறேன்:
ஜனங்களை மீட்க தேவன் மாம்சத்தில் வெளிபட்டார் (1யோ. 4:2, 1தீமோ. 3:16)

உலகத்தை உண்டு பண்ணின தேவனை மறந்து மனிதன் பாவம் செய்தான்.

அவன் தன் பாவத்தை தானே தீர்த்துகொள்ள முடியாததாகையால் தேவனே மாம்சத்தில் வந்து அந்த வழியை நமக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதாயிற்று. (எபி. 8:7-12, 1 யோ. 4:9)

தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை எந்த மனுஷனும் வாழமுடியும் என்று மாதிரியாக வாழ்ந்து நிரூபித்து காண்பித்தார் (1பேதுரு 2:21)

கிறிஸ்துவிற்கு முன்பு மோசேயின் நியாயபிரமாணம் இருந்தது – கிறிஸ்துவிற்கு பின்னர் – கிறிஸ்துவின் பிரமாணம் இருக்கிறது.

தேவன் முன்னரும் இருக்கிறார் – இப்போதும் இருக்கிறார் – எப்போதும் இருக்கிறவர்.

பிதா – குமாரன் – பரிசுத்த ஆவியானவர் – எப்போதும் இருப்பவர்கள்.

குமாரன் (வார்த்தை) – ஆதாம் உருவாக்கப்பட்டபோதே அங்கு இருந்தவர் (யோ. 1:1, 3)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----* 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக