ஞாயிறு, 2 ஜூன், 2019

#193 - ஒரு இஸ்லாமியரின் கேள்வி - எசேக்கியேல் 23:1–49 வரும் வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு சேர்ந்து படிக்க இயலுமா?

#193 - *ஒரு இஸ்லாமியரின் கேள்வி - பைபிளில் எசேக்கியேல் 23:1–49 வரும் வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு - குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா?*

*பதில்:*
மோட்சத்தை விரும்புகிறவர்கள் இரட்சிப்பை எப்படி பெற்றுக்கொள்வது என்று ஆராய்வார்கள்.

தாங்கள் செய்த பாவத்தை உணர்ந்தவர்கள் – எவ்வாறு அதில் இருந்து மீண்டு வருவது என்று தேடி அலைவார்கள்.

தங்களின் செயல்பாடுகள் பரலோகத்திற்கு கொண்டுபோகாது என்று அறிந்தவர்கள் பரலோக பாதையை தேடுவார்கள்.

செய்த பாவத்தை கண்டித்து சொல்லப்பட்டவை மேலே கொடுக்கப்பட்ட பகுதி. அவைகள் படிப்பதற்கே கூசுகிறது என்றால் – எவ்வளவு கொடிதான பாவத்தை  தேவனுக்கு விரோதமாக செய்திருக்கிறார்கள் என்பதை படிக்கிறவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாவம் செய்தவர்களை தேவன் ஒருபோதும் தப்பவிடுவதில்லை – அதற்கான தண்டனையையும் அதே பகுதியில் வாசிக்கமுடியும் (வ46-49)

பாவத்தை கண்டித்து உணர்த்துவது அவசியம் – எது பாவம் என்றும் எது பரிசுத்தம் என்றும் எப்படி பாவம் மன்னிக்க படுகிறது என்றும் எப்படி பரலோகம் போக முடியும் என்றும் – யார் மூலமாக பரலோகம் போக முடியும் என்றும் வேதத்தை விட வேறு எந்த புத்தகமும் இந்த உலகத்தில் தெளிவாக சொல்லியிருக்க முடியாது.

இயேசு கிறிஸ்துவாலன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12)

வேதாமத்தை படிக்க கூச்சப்பட்டால் – ஜீவனே நரகத்திற்கு போவதற்கு காரணமாகிவிடும் !!!

இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டதை – பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். அவை நாம் படித்து தேவனுக்கு விரோதமான செயல்கள் எவைகை ஜனங்கள் செய்தார்கள் என்றும் தேவனுடைய திட்டம் அவர்களுக்கும் நமக்கும் எவ்வாறு இருந்தது என்றும் அறிந்து கொள்ளவேண்டும்.

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது (1கொரி. 10:11)

கி.பி யில் வாழ்பவர்கள் – புதிய ஏற்பாட்டின் கட்டளையை படித்து கீழ்படியவேண்டும்.

மேலும்:
கிறிஸ்தவம் என்பது மார்க்கம் - பரலேகத்திற்கு போகும் வழியை காண்பிக்கிறது.

நாம் எந்த மதத்தினரோடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர் கோட்பாடுகளை நாம் குற்றஞ்சொல்லாமல் பரலோக இராஜ்ஜியத்தை குறித்து நாம் பேசுவது உசிதம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*----- 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக