ஞாயிறு, 2 ஜூன், 2019

#192 - பரதீசு எப்படியிருக்கும்? பாதாளம் எப்படியிருக்கும்?

#192 - *பரதீசு எப்படியிருக்கும்? பாதாளம் எப்படியிருக்கும்?*

*பதில்:*

*பரதீசு எப்படியிருக்கும்?*
பரதீசு எவ்வாறு இருக்கும் என்று தெளிவாக சொல்லப்படவில்லை.

ஆனால் –
லூக்கா 16:20-31ன் படி வேதனையில்லாத இடமும் (வ23) தேற்றபடும் இடமாகவும் (வ25) பரிசுத்தவான்களை காணும் (வ22) இடமாகவும் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

மூன்று இடங்களில் பரதீசை குறித்து தமிழ் வேதாகமத்தில் காணமுடிகிறது.

அவை:
லூக்.  23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

2கொரி. 12:3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

வெளி. 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

*பாதாளம் எப்படியிருக்கும்?*
80முறை தமிழ் வேதாகமத்தில் வருகிறது.
மனிதன் அங்கு போய் விடகூடாது என்று தேவன் பாதாளத்தை குறித்து மிகவும் பாரமுள்ளவராய் இருப்பதற்கு இது மிக பொிய குறிப்பு நமக்கு.

பாதாளம் வேதனைகுறியது – லூக். 16:23, 8:31
சஞ்சலம் மிகுந்த இடம் – ஆதி. 42:38
வியாகுலம் நிறைந்த இடம் – ஆதி. 44:29
தண்டனைகுறியவர்கள் அங்கு இருப்பார்கள் – எண். 16:30-33
அக்கினிஜீவாலை இருக்கும் – லூக். 16:24
சமாதானம் இருக்காது – 1இராஜா. 2:6
இருள் நிறைந்ததாக இருக்கும் – யோபு 17:13
இந்த பட்டியல் இன்னும் அதிகம்....

அனைவரும் பாதாளத்திற்கு தப்பவேண்டும்.

சத்தியத்தை கேட்டு விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று சத்தியத்தின் படி வாழாத யாவரும் இதில் பங்கு பெறுவார்கள்.

கிறிஸ்துவை ஏற்றக்கொள்ளாத யாவரும் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. (2 தெச. 1:7)

இரட்சிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த கேள்வியே உணர்த்தும்.

கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் அங்கமாக இருக்கிறீர்களா அல்லது மனிதன் ஏற்படுத்திய கூட்டத்தில் அங்கத்தினரா என்பதை ஆராய்ந்து பார்த்து பரதீசுக்கான வழியில் நாம் நிலைக்க வேண்டியது அவசியம்.

அருமையான கேள்விக்காய் நன்றி 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக