சனி, 1 ஜூன், 2019

#189 - ஒரு ரூபாய் காசை கையில் கொடுத்து அண்ணகர் ஒருவர் ஆசீர்வதித்து சென்றார்.

#189 - *ஒரு ரூபாய் காசை கையில் கொடுத்து அண்ணகர் ஒருவர் ஆசீர்வதித்து சென்றார். தேவனுடைய ஆசீர்வாதமே நிலைக்கும் என்று நான் அறிந்ததால் அந்த காசை ஆலயத்தில் போட்டு விட்டேன். இதை குறித்து விளக்கவும்*

*பதில்*:
God Bless You என்று இப்போது சிறுவர் கூட பயன்படுத்த துவங்கி விட்டனர். அதன் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ அநேகருக்கு அந்த வார்த்தை ஒரு பொழுது போக்காகி விட்டது. இருவர் பேசி விடைபெறும் போது கடைசியில் God Bless you என்று சொல்லும் அளவிற்கு இந்த வார்த்தையின் கனம் போய்விட்டது என்றே சொல்லமுடியும் இந்த காலங்களில்.

பொியவர்கள் சிறியவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எபி 7:7ல் பார்க்கிறோம்.
பொியவன் என்பது இங்கே தேவனுடைய ஆசாரியனை (மெல்கிசேதேக்கை) குறிக்கிறது.

பொியவர்கள் என்பது – மற்றவரை காட்டிலும் எல்லாவற்றிலும் தகுதியுள்ளவர்கள்.

பராக் என்கிற எபிரேய வார்த்தைக்கு ஆசீர்வாதம் என்கிற பதத்தை பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம்.

பராக் என்றால் முழங்கால்படியிடு என்று பொருள் !!!  (1சாமு. 13:10)

புதிய ஏற்பாட்டில் வரும்போது மர்காரியோஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு ஆசீர்வாதம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது – நல்ல காரியங்கள் நடக்கட்டும் நல்லது நடக்கட்டும் என்று பொருள். அதே போல யூலோகியோ என்ற கிரேக்க வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கும் வாழ்த்துதல் அல்லது மற்றவர்களை குறித்து நல்லதை பேசுங்கள் என்று பொருள்.

நீதி.  26:2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.

சங். 109:28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

சங்.  109:17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.

பொியவரோ தகுதியானவரோ அண்ணகர்களோ – யார் நம் மீது நல்ல வார்த்தைகளை சொன்னாலும் – அவர்கள் சொன்னது நம்மீது வருவதும் வராமல் இருப்பதும் நாம் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதில் உள்ளது. (உபா. 28:2,15, உபா. 11:28, உபா. 30:1)

#304 *கேள்வி - இறைவன் படைப்பில் ஆண்/பெண் இரு பாலர் மட்டும் தானே மூன்றாம் பாலர் ஏன்?*

*பதில்* :
ஆம், தேவன் ஆண் மற்றும் பெண்ணை தான் உருவாக்கினார்.

மூன்றாம் பாலர் என்பவர்கள் சரீர வளர்ச்சி குறைபாடுகளால் உறுவானவர்கள்.

தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார் இயேசு கிறிஸ்து (மத். 19:12)

அரசவையில் இராணியாருக்கு பாதுகாவலராக அண்ணகர்களை தான் நியமிப்பார்கள் (அப். 8:27) இல்லையென்றால் அனைவரும் யோசேப்பை போல உத்தமமாய் இருப்பார்கள் என்ற சொல்வதற்கில்லையே (ஆதி. 39:7-9)

நியாயப்பிரமானத்தின் படி – அவ்வாறு சரீர பெலவீனத்தால் அண்ணகர்களாக பிறந்தவர்களோ அல்லது அண்ணகராக்கப்பட்டவரோ

1- இஸ்ரவேலரோடு சேர்ந்து ஆராதிக்க தடைசெய்யப்பட்டார்கள்.

2- ஆசாரிய வேலை செய்ய தடை செய்யபட்டார்கள்.

லேவி. 21:17-21, உபா. 23:1-3

புதிய ஏற்பாட்டில் / புதிய கட்டளையில் / புதிய நியமனத்தில் கிறிஸ்துவானவர் மூலமாக தேவன் - எவரையும் தள்ளிவைக்காமல் அனைவரையும் தன் குமாரனுடைய இராஜ்ஜியமாகிய சபையில் சேர்த்தார்.

தேவனுடைய வீடு அனைவருக்கும் தேவனுடைய ஜெபவீடு எனப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களிலேயே தேவன் அதை வெளிப்படுத்தினார் (ஏசா. 56:3-5)

அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவை அப். 8:28-40ல் காண்கிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக