#190 - *சாத்தானும் அவன் தூதர்களும் எங்கிருந்து வந்தார்கள்?* அஞ்ஞானிகள்
பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே
பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன். நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு
மனதில்லை. 1 கொரிந்தியர் 10:20
இங்கு
சொல்லப்பட்ட வார்த்தை பேய்கள், பிசாசு
(devils), சாத்தான் Satan, அசுத்த ஆவி (unclean spirit) இந்த
பதங்கள் எல்லாம் யாரைக் குறிக்கிறது?
ஒருமையிலும், பன்மையிலும் குறிக்கப்படுகின்றனவே. பிசாசு
இருக்கிறான் என்பது அறிந்திருக்கிறோம். அவனது
தூதர் பட்டாளம் எங்கிருந்து வந்தார்கள்?
*பதில்:*
*1) சாத்தான்
(கிரேக்க பாஷையில் டையபோலஸ், ஆங்கிலத்தில்
டெவில்/Devil)*
. நிரந்தரமானவன்
அல்ல, உருவாக்கப்பட்டவன்
(கொலோ. 1:16)
. தேவனை விட அவன்
பெலசாலி அல்ல (1யோ. 4:4)
. தேவனுடைய
அனுமதியில்லாமல் அவனால் ஒன்றும் செய்யமுடியாது (யோபு 1:9-12, லூக்கா 22:31)
. அவன் உலகத்தின்
அதிபதி (2கொரி. 4:4) என்று சொல்லப்பட்டாலும் அது அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதேயன்றி
– அவனுக்கு சொந்தமல்ல (லூக்கா 4:6)
. அவனை
எதிர்க்கும்படிக்கு கிறிஸ்தவர்களாகிய நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது (யாக். 4:7)
. அவனுடைய கையில்
நாம் ஒப்புக்கொடுக்கப்படாதபடி தேவன் நம்மை பாதுகாக்கிறார் (யோ. 10:28)
. தேவன் அவனை
கட்டுகிறார் (வெளி. 20:2-3)
*2) அவனது
தூதர் பட்டாளம் எங்கிருந்து வந்தார்கள்?*
வெளி. 12:9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட
பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும்
தள்ளப்பட்டார்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக