சனி, 18 மே, 2019

பாஸ்டர்(pastor) என்றால் என்ன அர்த்தமென்று உங்களுக்கு தெரியுமா?

Ariyel Barnabas
Surampatti, Erode

பாஸ்டர்(pastor) என்றால் என்ன அர்த்தமென்று உங்களுக்கு தெரியுமா?

Mat 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
Rev 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

இன்றைக்கு கையில் பைபிள் எடுத்தவர்கள் எல்லாம் தங்களை பாஸ்டர்(pastor) என்ற அழைத்துக் கொள்ளுவதை பார்த்து இருப்பீர்கள்.அநேக ஊழியக்காரர்களும் தங்களை பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளுவதை விரும்புகிறார்கள், ஆனால் புதிய ஏற்பாட்டு ஆங்கில வேத வாக்கியத்தில் இந்த பாஸ்டர் என்ற வார்த்தை ஒரே ஒரு முறைதான் வந்து இருக்கிறது அதுவும் பன்மையில் தான் பாஸ்டர் என்ற வார்த்தை வந்து இருக்கிறது

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் பாஸ்டர்கள் என்று யாரை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்?
தலைமுடியை டிரிம் செய்து மீசையை மழித்துக் கொண்டு பெரிய  வெள்ளை வேஷ்டியையோ அல்லது பெரிய பைஜாமவையோ  அல்லது நீண்ட அங்கியையோ போட்டுக் கொண்டு கையில் பைபிள் பிடித்து கொண்டு வந்தால் அவர்களை தான் பாஸ்டர் என்று அழைக்கிறார்கள்

இன்னும் சிலர் யாராவது கையிலே பைபிளை பிடித்துக் கொண்டு வந்தாலே போதும் உடனே வாங்க பாஸ்டர் என்று அழைக்கிறார்கள்
பாஸ்டர் என்ற வார்த்தைக்கான அர்த்தம் அழைக்கப்படுகிறவர்களுக்கும் தெரிவதில்லை அழைக்கிறவர்களுக்கும் தெரிவதில்லை

பாஸ்டர் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன?
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
Eph 4:11  And he gave some, apostles; and some, prophets; and some, evangelists; and some, pastors and teachers;
Eph 4:11  AndG2532 heG846 gaveG1325 some,G3588 G3303 apostles;G652 andG1161 some,G3588 prophets;G4396 andG1161 some,G3588 evangelists;G2099 andG1161 some,G3588 pastorsG4166 andG2532 teachers;G1320
இந்த வசனத்தில் மேய்ப்பர் என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் பாஸ்டர் என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.

பாஸ்டர் என்பதற்கான கிரேக்க வார்த்தை poimēn (poy-mane')
அதற்கான கிரேக்க எண் 4166
அதற்கான அர்த்தம் மேய்ப்பன் என்பது தான்

G4166
ποιμήν
poimēn
poy-mane'
Of uncertain affinity; a shepherd (literally or figuratively): - shepherd, pastor.
இந்த மேய்ப்பன் என்ற வார்த்தை தான் எபேசியர் 4ம் அதிகாரம் 11ம் வசனத்தில் பாஸ்டர்கள் என்று பன்மையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

இந்த மேய்ப்பன் என்ற இந்த வார்த்தை ஒருமையிலே கிறிஸ்துவுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது
வேறு எந்த ஒரு மனிதனுக்கும் ஒருமையில் பயன்படுத்தப்படவில்லை

கீழே இருக்கிற வசனங்களுக்கெல்லாம் இதே கிரேக்க வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

இயேசு கிறிஸ்து பிறந்த போது ஆடுகளை மேய்ந்து கொண்டு இருந்தவர்கள் பன்மையில் மேய்ப்பர்கள் (pastors) என்று அழைக்கப்பட்டார்கள்
Luk 2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
Luk 2:15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லெகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
Luk 2:18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Luk 2:20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேய்ப்பராக (pastor) இருந்தார்
Mat 9:36 அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
Mar 6:34 இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு மேய்ப்பனாக(pastor) இருந்தார்
Mat 26:31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
Mar 14:27 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

இயேசு கிறிஸ்து இன்றைக்கு நம்முடைய ஓரே மேய்ப்பராக(pastor) இருக்கிறார்
Joh 10:2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
Joh 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
Joh 10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
Joh 10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
Joh 10:16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

இயேசு கிறிஸ்து இன்றைக்கு  நம்முடைய பெரிய மேய்ப்பராக (great
pastor) இருக்கிறார்
Heb 13:20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,

சபையால் ஏற்படுத்தப்பட்ட மேய்ப்பர்களுக்கு(pastors or shepherd) பிரதான மேய்ப்பராக (chief pastor or Shepherd) இயேசு கிறிஸ்து இருக்கிறார்
1Pe 5:1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
1Pe 5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
1Pe 5:3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
1Pe 5:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

கிறிஸ்து ஒருவரே நம்முடைய chief pastor (shepherd)  ராக இருக்கிறார்
இன்றைக்கு அநேக பெரிய போதகர்கள் தங்களை chief pastor(shepherd) என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள் இவர்கள் எல்லாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே தண்டனைக்கு தப்பிக்க முடியாது

இயேசு கிறிஸ்து நம்முடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் (Shepherd) கண்காணியுமானவராக (Bishop) இருக்கிறார்
1Pe 2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.

கண்காணி என்ற வார்த்தை தான் பிஷப்(bishop)  என்றும் ஓவர்சீரஸ்(overseers) என்றும் பாஸ்டர்(pastor) என்றும் மேய்ப்பன்(Shepherd) என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது

நாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே அந்த மேய்ப்பருக்கு(pastor) முன்பாக பிரிக்கப்படுவோம்
Mat 25:32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,

இந்த மேய்ப்பன்(pastor) என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது
Act 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
Act 20:17 And from Miletus he sent to Ephesus, and called the elders of the church.

இந்த வசனத்தில் மேய்ப்பர்கள் (pastors) என்ற வார்த்தை  மூப்பர்கள் (elders)  என்று பெயர்க்கப்பட்டுள்ளது
Act 20:28  Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.
Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

பாஸ்டர்கள்(pastors) மூப்பர்கள்(elders)   என்ற வார்த்தை இந்த இடத்தில் கண்காணிகள் (overseers) என்று மொழி பெயர்க்கப்பட்டள்ளது
1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:1 This is a true saying, If a man desire the office of a bishop, he desireth a good work.

அதே மேய்ப்பன்( என்ற வார்த்தை இந்த பகுதியில் கண்காணி(bishop) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) போன்ற அனைத்து வார்த்தையும் ஒரே கர்த்தருடைய பணியைத்தான் குறிப்பிடுகிறது.

இந்த பாஸ்டருக்கான(pastor, elder, bishop, overseer) தகுதிகள் என்ன?
பரலோகத்தின் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு அதற்கான தகுதியைக் கொடுத்து இருக்கிறார்.

பாஸ்டர் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களுக்கு இந்த எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்
1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
1Ti 3:3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
1Ti 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
1Ti 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
1Ti 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
1Ti 3:7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு இதே மூப்பர்களுக்குரிய தகுதிகளோடு மூப்பர்களை ஏற்படுத்த வேண்டும் என்று கட்டளை கொடுத்தார்
Tit 1:5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
Tit 1:6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
Tit 1:7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
Tit 1:8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
Tit 1:9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.

பாஸ்டருக்கான தகுதிகளில் அவர் திருமணம் ஆனவராக இருக்கவேண்டும். அவருக்கு பிள்ளைகள்(பன்மை) இருக்கவேண்டும், மேலும் மேற்சொன்ன எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்
அதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல்(திருமணம் செய்யவில்லை) தன்னை மூப்பர்(elder) என்றோ பாஸ்டர்(pastor,மேய்ப்பன்) என்றோ கண்காணி((bishop, overseer.பிஷப்) என்றோ தன்னை அழைக்காமல், கர்த்தருடைய ஊழியக்காரன்(அடிமை) என்றும் சகோதரன் என்றே தன்னை அழைத்துக் கொண்டார்.

பாஸ்டர்கள் (pastors) எப்படி தெரிந்து எடுக்கப்பட வேண்டும்?

பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) இந்த வார்த்தைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் ஒருமையில் பயன்படுத்தப்படவில்லை எல்லா வார்த்தைகளும் பன்மையில் (ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்) பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகளில் பாஸ்டர்(மூப்பர்) என்பவர் இல்லை பாஸ்டர்கள்(மூப்பர்கள்) என்று ஒன்று மேற்பட்டவர்கள் தான் இருந்து இருக்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்த சபைகளில் 1தீமோ 2;1 -7 தீத் 1:5-9 வசனங்களில் உள்ள தகுதிகள் யாருக்கு இருக்கிறதோ அவர்களில்  ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களை பாஸ்டர்களாக(மேய்ப்பர்கள். மூப்பர்கள். கண்காணிகள்) சபையின் சகோதரர்கள் சேர்ந்து தெரிந்து எடுக்கலாம். இதில் ஏதாவது ஒரு தகுதி குறைந்தாலும் அவர்களை பாஸ்டர்களாக(pastor) (மேய்ப்பன்.(மூப்பர்,elder,கண்காணி,bishop, overseer)  நியமனம் செய்யக்கூடாது.

சபையில் அங்கமாக இருக்கிற கிறிஸ்த ஸ்திரீகளை பாஸ்டர்களாக தெரிந்தெடுக்கக்கூடாது அதற்கான அதிகாரத்தை தேவன் சபைக்கு கொடுக்கவில்லை
கிறிஸ்தவ ஸ்திரீகள் பாஸ்டர்களாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
ஸ்திரீகள் உபதேசம் பண்ணவும், புருஷன் மீது அதிகாரம் செலுத்தவும் தேவன் அவர்களுக்கு அனுமதிக்க கொடுக்கவில்லை, அவர்கள் அமைதலாக இருக்க வேண்டும்(1தீமோ 2:11-15)
ஸ்திரீகள் சபையில் போதிக்கிறது அயோக்கியமாக இருக்கும் என்று தேவன் எச்சரிக்கிறார் (1கொரி 14:33-35)
தங்களை பாஸ்டர்கள் என்றும் ரெவரெண்ட் என்றும் அழைத்துக் கொண்டு புருஷர்கள் மத்தியில் உபதேசம் பண்ணிக் கொண்டு இருக்கிற ஸ்திரீகளுக்கு எவ்வளவு கொடிதான ஆக்கினை இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் (எபி 10:26-29)

தெரிந்து எடுக்கும் மூப்பர்களை(pastors) சபையானது போஷிக்க வேண்டும்
1Ti 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

சபையின் ஊழியரும்,சபையின் விசுவாசிகளும் தெரிந்து எடுக்கப்படும் பாஸ்டர்களுக்கு(pastors) (மேய்ப்பன் (shepherd) (மூப்பர்,elder,) (கண்காணி,bishop, overseer) கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
Heb 13:17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

ஆகையால் இந்த தகுதிகள் இல்லாதவர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யக்கூடியவர்கள் தங்களை ஊழியக்காரர்கள்(அடிமைகள்) என்றும் சகோதரர்கள் அழைத்துக் கொள்ள வேண்டும்
Mat 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக