வெள்ளி, 17 மே, 2019

#162 முடிந்து போன புஸ்தகம் வேதத்தில் ஏன் உள்ளது?


#162
கேள்வி:

கேள்வி/பதில் #161ல் முடிந்து போன ஏசாயா தீர்க்கதரிசியில் உள்ள ஆசீர்வாத வசனங்களை இப்போதும் ஊழியர்களால் உபயோகப்படுத்துவது சரியில்லை என்று எழுதினீர்கள் -  அப்படி என்றால் அந்த புஸ்தகம் வேதத்தில் ஏன் உள்ளது?

பதில்:
இந்த கேள்வியை எழுப்பிமைக்கு மிகுந்த நன்றி பிரதர்.

2தீமோ 2:15ல் வேதாகமத்தை பகுத்து போதிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்டவைகளையும் நியாயபிரமான கட்டளைகளையும் இப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்று போதித்து விட்டால் அவர்கள் சாபத்திற்குள்ளாகிறார்கள் என்றும் நாம் அறிகிறோமே (கலா 5:4, 3:10).

கிறிஸ்து அவையாவற்றையும் சிலுவையில் தீர்த்துவிட்டார் (ரோ 7:4-6)

கிறிஸ்து நியாயபிரமானத்தை முடித்து வைத்தவர் (ரோ 10:4)

பின்னர் ஏன் அந்த பகுதிகள் வேதாகமத்தில் இருக்கிறது என்பது உங்கள் கேள்வி:

அதற்கு ரோமர் 15ம் அதிகாரம் 4ம் வசனத்தில் அப். பவுல் நமக்கு பதிலளித்திருக்கிறார் - தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

பகுத்து போதிக்காவிடில் - ஜனங்களை கலப்பாய் நடத்தப்படுவதற்கு போதகர்கள் காரணமாகி விடுகிறார்கள் – ஆகவே தான் யாக் 3:1ல் அதற்கான எச்சரிப்பை பெற்றிருக்கிறோம்.

2ம் முறையும் மோசே மலையை அடித்த போது தண்ணீர் வந்தது உண்மை தான் – ஜனங்கள் போஷிக்கப்பட்டதும் உண்மை தான். ஆனால் – மோசே தண்டிக்கபட்டுவிட்டாரல்லவா? எண் 20:8-12

நன்றி
எடி ஜோயல்


** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும் : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக