#163 - *சீட்டு
போடுதல் சரியானதா?* அப்படி
முடிவு எடுப்பது தேவ வல்லமையை வெளிப்படுத்துமா? அப்படி
தெரிந்தெடுப்பது சரியானதா? இன்றைக்கும்
அந்த நடைமுறைகளை பின்பற்றலாமா?
*பதில்:*
சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் முறை வேதாகமத்தில் இலகுவாக காணமுடியும்.
இஸ்ரவேல் தேசம் சீட்டுகளால் பங்கிடப்பட்டது (யோசு. 18: 6).
சீட்டு போடப்பட்டு சவுல் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1 சாமு. 10:21)
யோனாவும் அதே வழியில் கண்டு பிடிக்கப்பட்டார் (யோனா 1:7).
பன்னிரண்டாவது அப்போஸ்தலராக மத்தியாஸ் சீட்டு போடப்பட்டு தேர்ந்தெடுத்தார்கள் (அப்.
1:26)
சீட்டு மடியில் போடப்படும் காரியசித்தியோ கர்த்தரால் வரும் என்று நீதிமொழிகள் 16:33ல் பார்க்கிறோம்.
இப்படி இன்னும பல
உதாரணங்களை வேதாகமத்தில் காணமுடியும்.
*கவனிக்கவேண்டியவை:*
அப்போஸ்தலரை தேர்ந்தெடுக்கும்
பொறுப்பு இயேசுகிறிஸ்துவின் கையில் இருந்தது. தகுதியில் மத்தியாஸ் மற்றும் யோசேப்பு
(பர்சபா) இரண்டு பேருமே ஒரே மதிப்பில் இருந்தவர்கள். யார் பேரில் விழுந்திருந்தாலும்
இருவருமே தகுதியானவர்கள் தான்.
இந்த சம்பவத்திற்கு
பின்னர் – சீட்டு போடும் முறையை அப்போஸ்தலர்கள் பின்பற்றவில்லை (அப். 14:23, தீத்து 1:5)
தகுதியின்
அடிப்படையில் தேர்ந்தெடுப்பது உசிதமானது. பூரணமான நிருபங்கள் முழுமையான தகவல்களை
நமக்கு கொடுத்திருப்பதால் – சகலவற்றையும் நாம் நிதானித்து முடிவெடுக்கும் அளவிற்கு
தேவன் நமக்கு வேதத்தின் மூலம் தெளிவை தந்திருக்கிறார். (2தீமோ. 3:16-17)
ஆகவே சீட்டு போட்டு
தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவது சரியல்ல.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப் குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக