சனி, 4 மே, 2019

#135 - தேவபுத்திரர் & மனுஷபுத்திரரை குறித்து விளக்கவும்.

#135 - *தேவபுத்திரர் & மனுஷபுத்திரரை குறித்து விளக்கவும்*.

ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் வரும் தேவபுத்திரர்; மனுஷபுத்திரரை குறித்து விளக்கவும்.

ஆதி 6:1-2 மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

*பதில்*:
மேற்குறிப்பிட்டுள்ள வசனத்தில் வரும் :

தேவ குமாரர் – சேத்தின் வம்சத்தினரையும் (தேவனை தொழுதுகொண்டிருந்தவர்கள் - பார்க்கவும் ஆதி. 4:26)

மனுஷ குமாரத்திகள் – ஏனோக்கின் பெண்களை (குமாரத்திகளை) குறிக்கிறது. ஆதாம் 4:16-24

6ம் வசனத்தில் இராட்சதர் என்ற பதம் வருவதால் நாம் வழக்கமாக கதை புஸ்தகங்களில் படிக்கும் நரகாசுரன் / அசுர பலம் படைத்தவர்கள் என்று புரிந்து கொள்ள தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆனால் இராட்சதர் என்றால் – மோசமானவர்கள் / இரக்கமற்றவர்கள் / துரோகிகள் / அநியாயக்காரர் என்ற பதத்திற்கான எபிரோய (மூல வார்த்தை – நெஃபீல் நெஃபீல் - nephı̂yl nephil)  பாஷை உபயோகபடுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் யோபு 1:6, 2:1, 38:7 வரும் தேவகுமாரர் தேவ தூதர்களையும் மற்றும் சங்கீதம் 29: 1, 89:6 ல் வரும் பலவான்களின் புத்திரர் என்பது தேவ ஜனங்களையும் குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக