புதன், 1 மே, 2019

#132 - பெந்தேகோஸ்தே சபையிரை எங்கள் வீட்டில் ஜெபிக்க அனுமதிக்கலாமா?

#132 - கேள்வி:

 நாங்கள் கிறிஸ்துவின் சபையை சேர்தவர்கள் இதற்க்கு முன்னால் பெந்தேகோஸ்தோ சபையில் இருந்தோம் ...அந்த சபையை சார்ந்த ஊழியர்கள் எப்பொழுதாவது உங்கள் வீட்டிற்க்கு வந்து ஜெபிக்கலாமா  என்று கேட்கின்றார்கள் ...நாங்கள் அவர்களை அனுமதிக்கலாமா???

“Wherefore, brethren, give the more diligence to make your calling and election sure: for if ye do these things, ye shall never stumble: for thus shall be richly supplied unto you the entrance into the eternal kingdom of our Lord and Saviour Jesus Christ.”
‭‭2 Peter‬ ‭1:10-11


இந்த வசனம் படி நாம் ஜெபிக்க அனுமதிக்கலாம???



பதில் : கிறிஸ்துவின் சபையாராக இருப்பது மிக பொிய சந்தோஷம்.

சரியான சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள். நாம் ஒவ்வொருவரும் ஒரு அங்கமாக அவருடைய சரீரத்தில் இருக்கிறோம் (எபே 5:30)

பெந்தேகோஸ்தே அமைப்பினர் ஜெபிக்க வருவதை தடைசெய்யும் அளவிற்கு நாம் அவர்களோடு விரோதம் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை - ஜனங்களோடு நாம் வைத்திருக்கும் தொடர்பு - அவர்களுக்கு ஏற்ற வேளையில் சரியானவற்றை சொல்ல ஏதுவாயிருக்கும்.

அப்போஸ்தலர்கள் - வாரத்தின் முதல் நாளில் ஆராதிக்க துவங்கிய பின்னரும் சனி கிழமைகளில் தேவாலயம் போவதை நிறுத்தவில்லை !! அங்கு போய் அவர்களுக்கு சத்தியத்தை சொன்னார்கள்.
(அப் 3:1, 13:14-16; 14:1; 17:1-3; 18:4)

மேலும் - தேவ தூதனே ஒரு முறை அப்போஸ்தலர்களை அங்கு போய் சத்தியத்தை சொல்ல சொன்னான் (அப் 5:19-20)

அவர்கள் ஜெபித்த பின்னர் - ஆமேன் சொல்லாமல் இருப்பது அவர்களுடைய தவறான ஜெபத்திற்கு நம்மை கூட்டு சேர்க்காது.

அவர்கள் அறியாமல் ஜெபிக்கிறவர்கள்.

அவர்கள் உபதேசத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது - மிக தெளிவாக உட்கார்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அவர்களுக்கு நாமே எடுத்து விளக்க இது அருமையான தருணம் ~ !!! அநேக முறை இப்படி நான் பலரை ஆதாயபடுத்தியிருக்கிறேன் ~!!!

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக