ஞாயிறு, 5 மே, 2019

#136 - வெளிப்படுத்தல் 9:1-3 & 11ம் வசனங்களை விளக்கவும்.

#136- *வெளிபடுத்தல் 9:1-3 & 11ம் வசனங்களை விளக்கவும்.
வெளி. 9:1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

வெளி. 9:2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.

வெளி. 9:3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.

வெளி. 9:11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

*பதில்:*
வெளிப்படுத்தல் புஸ்தகம் – வெளிபடுத்தப்பட வேண்டும்.
அதாவது  - இந்த புஸ்தகத்தில் சொல்லப்பட்ட 99சதவீதம் தகவல்களை நாம் அப்படியே அர்த்தங்கொள்ளமுடியாது. அவைகளை நாம் வேதாகம ரீதியில் decode செய்யவேண்டும் – அதாவது இரகசிய மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஏழு தூதனின் எக்காளம் ஊதும் நிகழ்வுகளின் 5ம் எக்காளத்தின் பகுதி இந்த 9ம் அதிகாரம் முதல் 12வசனங்கள்.

7எக்காள தொனி – 2பிரிவுகளாக உள்ளது.
முதல் 4 ஒரு பிரிவாகவும் பின்னர் 3 ஒரு பிரிவாகவும் உள்ளது.

[வெளி. 8:13 பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்]

நீங்கள் கேட்ட வசனபகுதியை சிறு குறிப்புகளாக வெளிபடுத்தும்போது சில முக்கிய தகவல்களை நாம் இழக்க அல்லது திரித்து சொல்ல ஏதுவாகும். ஆகவே அதை குறித்ததான தெளிவான விளக்கவுரையை இங்கு இணைக்கிறேன். முழுமையான ஒரு தொகுப்பு.

கேள்விக்காய் நன்றி

எடி ஜோயல்

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக