ஞாயிறு, 5 மே, 2019

#137 - லேவியராகமம் 5:11 & 8:34 - இரண்டு காட்டுப்புறாக்களையாவது - Pls explain

#137 - *லேவியராகமம் 5:11 - இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக, அது பாவநிவாரண பலியாயிருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்துலேவியராகமம் 8:34 இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்*.

Praise the Lord brother! Please Explain the above Bible Verses 👆👆 - Thank u brother.


*பதில்:*
பழைய நியமனப்படி உள்ள பலிகளில் ஒன்று பாவ நிவாரண பலி.
ஏழை ஜனங்களும் இதை செய்யும் அளவில் தேவன் அவர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்று மேலே நீங்கள் குறிப்பிட்ட வசனம் (5:11)

நாம் அனைவரும் யூதரல்லாதவர் – அதாவது புறஜாதியினர்.

நியாயபிரமாணம் – இஸ்ரவேலருக்காக கிறிஸ்துவுக்கு முன் கொடுக்கப்பட்டது.  இப்போது இஸ்ரவேல் ஜனங்களும் அதை பின்பற்ற முடியாது (எரே. 31:31, ரோ. 10:4).

நம் பாவங்கள் ஞானஸ்நானம் எடுக்கும் போது மன்னிக்கப்படுகிறது (அப் .2:38, 22:16)

ஞானஸ்நானம் எடுத்தபின் செய்யும் நாம் அறியாமல் செய்யும் பாவத்தை – உணர்ந்த போது அறிக்கை செய்து விட்டுவிடும் பட்சத்தில் தேவன் நமக்கு மன்னிக்கிறார். (யாக். 5:16, 1யோ. 1:8-10)

உணர்த்துவிக்கப்பட்டும் தொடர்ந்து விருப்பத்தோடு செய்யும் பாவம் தண்டிக்கப்படுகிறது (எபி. 6:4-6; 2:4)

கொடுக்கப்பட்டுள்ள வசன குறிப்புகளை வேதாகமத்தில் ஒப்பிட்டு பார்க்க மறக்கவேண்டாம்.

கேள்விக்காய் நன்றி பிரதர்

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக