*#138 - கேள்வி: எக்காள சத்தம் எல்லோருக்கும் கேட்கப்படுமா?*
எக்காள சத்தம் எல்லோருக்கும் கேட்கப்படுமா அல்லது கிறிஸ்துவுக்குள் மரித்த, உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுக்கு மட்டும் கேட்குமா பிரதர்
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15:51, 52
*பதில்:*
எக்காள சத்தத்தை குறிப்பாக எல்லாரும் கேட்பார்கள் என்ற வசனம் காணப்படவில்லை.
ஆனால் நம் இரட்சகர் வருவதை *அனைவரும்* காண்பார்கள் என்று தெளிவாய் வசனம் சொல்கிறது.
Mat. 24:30 அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள *சகல கோத்திரத்தாரும்* கண்டு புலம்புவார்கள்.
Mat. 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
Rev. 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் *யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும்* அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக