செவ்வாய், 28 மே, 2019

#181 கேள்வி: விசுவாசம் vs நம்பிக்கை அர்த்தம் சொல்லுங்கள்?

#181 *கேள்வி: விசுவாசம் vs  நம்பிக்கை அர்த்தம் சொல்லுங்கள்?*

*பதில்:*
இரண்டு வார்த்தைக்கும் அதிக வித்தியாசமும் தனித்துவமும் உண்டு.

விசுவாசம் : தற்போது / இப்பொழுது இருப்பவையை குறித்தவை.
நம்பிக்கை : எதிர்காலத்தை குறித்து வருபவை.

ஆதாரம்:

ரோமர் 8: 24-25 : அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?  நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

எபிரெயர் 11:1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

விசுவாசம் நம்பிக்கையை அளிக்கிறது.

ஜெபிக்கும் போது பெற்றுக்கொள்வோம் என்கிறது விசுவாசம் - மாற்கு 11:24
விசுவாசமானது – இருதயத்தில் உள்ளது.

கேட்டது கிடைக்கும் வரை வரை, விசுவாசத்தை உயிருள்ளதாக நம்பிக்கை வைத்துக்கொள்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----* 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக