புதன், 29 மே, 2019

Daily Dose 29-5-19

நம்மை விசாரிக்கும் பரிசுத்த தேவனின் நாமத்திற்கு சகல துதியும் கணமும் உண்டாவதாக.

காலை எழுந்தவுடன், இரவு தூங்க போகும் நேரம், வேலையை துவங்கும் நேரம், வாகனத்தை ஸ்டார்ட் பண்ணும்போதும் நாம் கடவுளை ஒரு முறை நினைத்துகொள்கிறோம்.

நமக்கு ஆபத்து வரகூடாது, எல்லாம் நன்மையாக நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம். அப்பொழுதெல்லாம் அமைதியாக ஜெபிக்கும் ஜெபம் எப்படி கேட்கப்படுகிறது?

மற்றவர்களோடு கூடி இருக்கும் போது அவர்களுக்கும் கேட்கும்படி நாம் ஜெபித்தால் அதில் அர்த்தம் உள்ளது... மாறாக வானத்துக்கே எட்டும் அளவிற்கு ஏன் கத்த வேண்டும்? (மத் 6:8)

தேவன் நம்மில் இருக்கிறார். இருதயத்தில் வசிக்கிறார். குமுறலையும் கேட்கும் தேவன். முனுமுனுத்தாலும் அறிந்து கொள்கிறார். (எரே 17:10)

நம் ஜெபம் கேட்கப்பட மணி அடிக்கவோ, வெடி வைக்கவோ, கை தட்டி அவரின் கவனத்தை நம் பக்கம் திருப்புவதோ, இசையோடு சேர்ந்து இராகத்தோடு ஜெபிக்கவோ தேவை இல்லை.

முழு இருதயத்தோடு ஜெபித்தால் நிச்சயம் அவருக்கு கேட்கும்.
 
எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

May all the Honor and Glory be to the Holy Lord who looks after us always.

Either at the moment we awake from bed or going to bed, before starting a job or a car/bike etc, we remember our God in our heart.

That is because we wanted to have a safe sleep, peaceful day etc. How those silent prayers are heard?

We pray a bit louder when others are gathered, so they can hear and say Amen at the end. But why to shout and scream as if it should reach the sky? (Mat 6:8)

God dwells in us. He dwells in our heart. Even a turmoil or a mild murmur is heard by Him (Jer 17:10)

We don’t have to pray with a banging bell or blast crackers or explosives or clapping hands to get His attention or with background music !

The prayers sent with full hearted shall reach HIM. No doubt in it.

Eddy Joel
+968 93215440
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக