#160 - *நாம்
காணும் கணவுகள் நம் வாழ்வில் நிறைவேறுமா? எனக்கு ஒரு கணவு இரு முறை வந்தது.
வேதத்தின் படி பதில் அளிக்கவும்*. நன்றி.
*பதில்:*
கனவுகளை குறித்த
கேள்வி ஒரு சுவாரஸ்யமான தலைப்பு.
பலர் கனவுகளை
விளக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய உதவியின்றி எந்த ஒரு கனவை பற்றிய விளக்கத்தை எவரும் சரியாகக்
கொடுத்ததாக ஆதாரம் இல்லை.
கனவுகள் 99.999% நடந்தவற்றை
மனதில் கொண்டு ஓடும் எண்ணங்களின் தாக்கத்தில் உருவாகிறது என்று வேதத்தில்
பார்க்கிறோம் (பிர. 5:3)
தேவன் தனக்கு ஏதோ
ஒன்றை வெளிப்படுத்துகிறார் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் வேதத்திற்கு முரணாகிவிடும்
(1கொரி. 4:6)
ஏனெனில், தேவன் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும்
இந்த கடைசி காலங்களில் தமது குமாரன் மூலமாக தொிவித்திருக்கிறார் (எபி. 1:1-2, 2தீமோ. 3:16-17)
நம் ஜீவனுக்கும் தேவபக்திக்கும்
வேண்டிய யாவற்றையும் அவர் நமக்கு வேதத்தின் மூலம் தந்தருளியிருக்கிறார் (2பேதுரு 1:2-3)
கனவுகள் நம்முடைய
ஆழ்ந்த நினைவுகளை நினைப்பூட்டும் – அவைகளை நிதானிக்கும் போது நடந்தவைகளை ஊர்ஜீதப்படுத்தப்படுவதை
உணரமுடியும். கனவுகளின் அடிப்படையில் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒருநாளும்
நிதானிக்கக்கூடாது – நமக்கு வேத வசனமே கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாக
இருக்கக்கடவது (சங். 119:105)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக