புதன், 15 மே, 2019

#157 - முதலாம் நாளில் எப்படி வெளிச்சம் வந்தது???

#157 - *முதலாம் நாளில் எப்படி வெளிச்சம் வந்தது?*
ஆதியாகமம் 1:14-19 ன்படி *தேவன் சூரியன் சந்திரன் மற்ற எல்லா சுடர்களையும்  படைத்தது நான்காம் நாளில்,  அப்படியானால் இந்த பூமிக்கு முதலாம் நாளில்  எப்படி வெளிச்சம் வந்தது???

ஆதியாகமம் 1:3-5 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று." - விளக்கவும்.

*பதில்*:
மனிதர்களாகிய நாம் எதையும் கண்டும் கேட்டும் அறிந்து கற்றவர்கள்.  அந்த அடிப்படையிலேயே சகலவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

எந்த ஒரு மூல ஆதாரமும் இல்லாமல் வெளிச்சம் எப்படி வரும் என்று நம் மூளை நமக்கு கேள்வி எழுப்புகிறது.

நம் தேவாதி தேவன் – சர்வ வல்லவர்
ஒன்றும் இல்லாத போதே சகலவற்றையும் பேர் சொல்லி அழைத்தவர் (யோபு 38:4-6, 28-29; சங். 33:9, 146:6, 102:24-27, ஏசா. 57:15)

சூரியனை கொண்டு தான் வெளிச்சம் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு இல்லை.. கீழே உள்ள வசனங்களின் அடிப்படையில் பார்க்கும் போது – ஆரம்பத்திலும் இது அவசியப்பட்டிருக்காது என்பது தின்னம்.

வெளி. 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

ஏசா. 60:19 இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக