கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
2 சாமுவேல் 12:11
இந்த வசனம் மிகவும் அபாசமாக
இருக்கிறது ஏன் கடவுள் இந்த வசனத்தில் அபாசத்தை வெளிப்படுத்துகிறார். இவ்வசனத்தின் நிமித்தம் கடவுளை அறியாத நண்பர்கள்
என்னை மிகவும் கேலி கிண்டல் செய்கிறார்கள்
அந்த வசனத்திற்கு விளக்கம்
தாருங்கள் ஐயா...🙏
பைபிளில் சொல்லப்பட்ட அபாசம்
போல் வெற எந்த புத்தகத்திலும் படிக்க முடியாது என்று சொல்கிறார்கள் ஐயா
நான் மற்றவர்களுக்கு விளக்கி
சொல்லவேண்டும் ஐயா
*பதில்:*
கற்பனையிலும் காவியத்திலும்
அழுக்கிலும் நெற்றியிலிருந்தும் மிருகத்திலிருந்தும் வந்தவர் அல்ல கடவுள் என்பவர்.
அவர் ஆதியும் அந்தமுமானவர். அவருக்கு தொடக்கமும்
இல்லை முடிவும் இல்லை.
அவர் பரிசுத்தமுள்ளவர், அன்புள்ளவர் –
இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுள்ள கடவுள் (யாத். 34:6)
சம்பளம் கொடுக்கும் முதலாளி சொன்ன
வார்த்தையை அப்படியே செய்ய வேண்டும் என்று நமக்கு தொிகிறது. அதில் தவறினால் தண்டிப்பார்
என்று பயந்து சரியாக செய்கிறோம். ஒரு சாதாரன முதலாளி மீது இருக்கும் இந்த பயம் –
கடவுள் மீது இல்லாமல் போனால் அவர் தண்டியாமல் விடுவாரோ?
அவர் பட்சிக்கிறவர் – கோபம் மிகுந்தவர்
– நீதியை சரிகட்டுகிறவர்
– உக்கிர கோபமுள்ளவர் – சத்துருக்களுக்கு பிரதிபலன் கொடுப்பவர் – யாத். 34:14;
உபா. 4:24, 6:15, 32:21; யோசுவா 24:19; சங். 78:58; நெகே. 1:2
நீங்கள்
சொன்ன வசனபகுதியில் வரும் நபர் தாவீது. அவரை கடவுள் தன் இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்
என்று நினைத்திருந்தார் - 1 சாமு. 13:14
ஆனால்
அவரோ – ஒரு நாட்டிற்கே இராஜாவாக உயர்த்தப்பட்டிருந்த போதும் தனக்கானவைகளை மறந்து –
மாற்றான் மனைவியை அபகரித்து அவள் கணவனை யாரும் அறியாமல் கொன்றுபோட்டான் (2 சாமு.
12:9)
தேவன்
தீமை செய்கிறவரல்ல.
மனுஷன்
தான் செய்த தவறான காரியத்திற்கு அதற்கேற்ற தண்டனையை பெற்றுக்கொள்கிறான் – அந்த தீர்ப்பு
தான் நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் வரும் பகுதி.
இந்த
பகுதி ஆபாசம் என்று சொல்வதல்ல – இது அந்த மனுஷன் தேவனுக்கு விரோதமாய் செய்த தவறின்
அடிப்படையில் அதற்கேற்ற தண்டனை அது.
மாற்றான்
மனைவியை மறைமுகமாக அநேகருக்கு முன்பாக கொலை செய்தான் தாவீது – அதன் தண்டனையாக தன் ஸ்திரீகளை
பறிகொடுத்தான் (2 சாமு. 12:11)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக