ஏவாள் படைப்பு ... ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை உண்டு பண்ணினார் .அவன்" நித்திரை அடைந்தான். அவர்(கடவுள்) அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையால் அடைத்தார். எடுத்த விலா எலும்பிலிருந்து மனுஷியை உண்டாக்கினார்" என்று பைபிளிள் (ஆதியாகம்; அதி.2 வசனம்21)
இந்த மிகபெரிய பொய்யை புகுத்தியுள்ளனர்
ஆதாமினுடைய விலா எலும்பை எடுத்து அந்த இடத்தைச் சதையால் அடைத்தார் என்றால் யாருடைய சதையால் அடைத்தார் இன்னும் பல ஆதாம்தான் உலகத்தில் முதல் மனிதன் என்கிறது பைபிள் அப்படியிக்க ,வேறு மனிதர்கள் உலகில் இல்லாதபோது யாருடைய சதையை எடுத்து விலா எலும்பிற்கு பதிலாக வைத்திருக்க முடியும்? இந்த கேள்விக்கும் பதில் தருக
*பதில்:*
பல நேரங்களில் கேட்பவர்களின் கேள்வி திறனால் உண்மை மறைந்து போகிறது.
உண்மையை புரிய விரும்பாமல் தன் பங்கிற்கு பேசிக்கொண்டு மாறி மாறி கேள்வியை துளைக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Fallacy என்று சொல்வார்கள்.
வேதாகமம் முழுக்க முழுக்க தவறுகளே இல்லாத புத்தகம் – ஆகவே தான் வேறெந்த புஸ்தகத்திற்கும் கொடுக்கப்படாத பெயர் உலகத்திலேயே வேதாகமத்திற்கு “ *பரிசுத்த வேதாகமம்* ” என்று அழைக்கப்படுகிறது.
அறைகுறையாய் அங்குமிங்கும் புரியாமல் படித்தவர்கள் தான் இப்படி ஒரு கூற்றை (பொய்யை) அப்பட்டமாக சொல்லமுடியும்.
விலா எலும்பு எடுத்த இடத்தை சதையினால் அடைத்தார் என்றால் – எலும்பு இருந்த அந்த இடத்தை வேறோரு சதையை கொண்டு நிரப்பினார் என்பதல்ல அர்த்தம். திறந்த தோலை/சதையை மூடினார் என்பது அதன் பொருள் !! (வ21)
(ஆங்கிலத்தில் : And the LORD God caused a deep sleep to fall upon Adam, and he slept; and he took one of his ribs, and “ closed “ up the flesh in its place.)
வயிற்றை கிழித்து திறந்து ஆபரேஷன் செய்து விட்டு சதையை மூடிவிட்டார்கள் என்றால் எப்படி பொருள் கொள்வோம்?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக