திங்கள், 13 மே, 2019

#151 கேள்வி: என் மரணத்தை நினைவுகூருங்கள் என்று இயேசுவானவர் கூறினார் - கிறிஸ்துமஸ் என்று சொல்லி அவர் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். விளக்கம் தேவை.

#151 *கேள்வி*: என் மரணத்தை நினைவுகூருங்கள் என்று இயேசுவானவர் கூறினார். எந்த இடத்திலும் என் பிறந்த நாளை நினைவுகூருங்கள் என்று கூறவில்லை. அனேக போதகர்கள் கிறிஸ்துமஸ் என்று சொல்லி அவர் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆகையால் வேதவாக்கியங்களின்படி கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது அல்லது கொண்டாடுவது தவறு என்று சொல்லி விளக்கம் தரமுடியுமா சார் நான். நாலு பேருக்கு  சொல்லி உணர்த்த வேண்டி இருக்கு சார் அதான் நன்றி சார்

*பதில்*:
நீங்கள் சொல்வது 100சதவீதம் சரி.
கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கூட வேதாகமத்தில் கிடையாது.

புதிய ஏற்பாடு ஏறத்தாழ 100 ஆண்டுகளை உள்ளடக்கியது. அதாவது கிறிஸ்து பரமேறின பின்னர் சுமார் 60 ஆண்டுகளின் நடவடிக்கைகளை வெளிபடுத்தல் புஸ்தகம் வரை பார்க்கமுடியும்.

*முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்*:
கிறிஸ்து பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து ஒரு ஜெபகூட்டமோ அல்லது பெந்தெகோஸ்தே நாளின் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அந்த மேல் வீட்டறையில் ஒரு ஜெபகூட்டமோ கூட்டினதாக வேதாகமத்தில் பார்க்க முடியாது.

நாம் கடைபிடிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லப்படாததை நாம் கடைபிடிக்க கூடாது. அது நமக்கு சாபம் (வெளி. 22:18-19)

கிறிஸ்துவிற்கும் கிறிஸ்துமஸ்க்கும் வேதாகமத்தில் எந்த சம்பந்தமும் இல்லை.

.இது ஒரு கத்தோலிக்கர்களின் பண்டிகை.
 
சுமார் 300 ஆண்டிற்கு மேல் கத்தோலிக்கர்கள் முதலில் இதை
1-Mary Christ mass என்று அறிமுகப்படுத்தினார்கள்.
2- Mary என்ற பெயர் இருப்பதால் கத்தோலிக்கரல்லாதோரை உள்ளே இழுக்க மேரியை எடுத்து போட்டு  
3- Merry Christmas ஆக்கினார்கள்.
4- Merry Christmasல் Christ என்று பெயர் இருப்பதால் கிறிஸ்தவரல்லாதோரை உள்ளே இழுக்க Xmas ஆக்கிபோட்டர்கள்...

ஆக – இப்போது அவர்கள் கொண்டாடும் பண்டிகையில் *மோியும் இல்லை கிறிஸ்துவும் இல்லை* !!

மேலும்,
*** இவர்கள் பயன்படுத்தும் வாழ்த்து அட்டை படத்தில் வரும் *மூன்று சாஸ்திரிகள் – வேதாகமத்தில் இல்லை* !!

*** அட்டை படத்தில் இருப்பது போல் *மூன்று சாஸ்திரிகளோடு + பிறந்த குழந்தை + மாட்டு தொழுவம் - வேதாகமத்தில் இல்லை* !!

வசன குறிப்பு அல்லது ஆதாரமில்லாத என்னுடைய முதல் பதிவு இது என்று நினைக்கிறேன். என்ன செய்ய வேதத்தில் இல்லையே !!!!

இப்படிப்பட்ட வேதாகமத்திற்கு விரோதமான பண்டிகையிலிருந்து விலகியிருப்பதே ஆசீர்வாதம்.

அதே நேரத்தில் இப்படிப்பட்ட விளம்பரங்களினால் ஈர்க்கப்பட்டு என்றுமே யோசிக்காதவர்கள், வேறெந்த நாளிலும் கிறிஸ்தவ கூடுகைக்கு வராத அநேகர் டிசம்பர் 24ம் தேதி இரவு அல்லது 25ம் தேதிகளில் சபைக்கு வந்தால் என்ன என்று நினைத்து வரும் புதியவர்களை நான் உதாசீனபடுத்தாமல்  அன்றாகிலும் அவர்கள் மனந்திரும்ப வாய்ப்பு இருக்குமே என்ற வாய்ப்பை நான் நழுவவிடாமல் சத்தியத்தை சொல்லி கொடுத்து பிரயோஜனபடுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு....

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக