திங்கள், 13 மே, 2019

#150 கேள்வி: விளக்கவும் - கலாத்தியர் 6:7


#150 கேள்வி:
விளக்கவும் - கலாத்தியர் 6:7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.


பதில்:
அனனியா சப்பிராளின் சம்பவம் (அப் 5ம் அதிகாரம்) நினைவு படுத்திக்கொண்டால் இந்த பகுதி சுலபமாக விளங்கும்.

யாரும் கேட்காமலேயே அவர்கள் தாங்களாகவே தங்கள் சொத்துக்களை விற்றார்கள்.

சபையில் கொண்டு வந்து ஒரு பங்கை கொடுத்தார்கள்.

ஒரு பங்கு தான் என்று சொல்லியிருந்தால் அதில் வஞ்சனையில்லை.

சொத்துக்களை விற்று முழுவதையும் சபைக்கென்று நாங்கள் தியாகம் செய்திருக்கிறோம் என்று மற்றவர் முன்பு மேன்மைபடுத்திக்கொள்ள விரும்பி வீணாக போனார்கள்..

அது போல – ஒருவன் தன் ஆதாயத்திற்காக ஒரு காரியத்தை செய்து விட்டு அதை தேவனுக்காக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டு பிரதிபலன் தேடி காத்திருந்தால் – ஒன்றும் கிடைக்காது. (வ6, 8)

நன்றி பிரதர்
எடி ஜோயல்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக