வெள்ளி, 5 ஏப்ரல், 2019

#88 Question: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 3.5 (மூன்றரை ஆண்டுகள்) ஊழியம் செய்தார் என்று எப்படி கணக்கிடுகிறோம்? வசன ஆதாரத்துடன் விளக்கம் தேவை

#88 *கேள்வி*: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 3.5 (மூன்றரை ஆண்டுகள்) ஊழியம் செய்தார் என்று எப்படி கணக்கிடுகிறோம்? வசன ஆதாரத்துடன் விளக்கம் தேவை சகோ.

*பதில்* :
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்கும் போது, அவருக்கு சுமார் 30வயது (லூக்கா 3:23)

1- யோ. 2:13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், …..  யோ. 2:23 பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

2- யோ 5:1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.

3- கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் வரும் மூன்றாவது பஸ்கா - சிலுவை மரணம் சமயத்தில் –மத். 26:17-30

இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்திற்கு பின் சுமார் 6 மாதத்தில் முதல் பஸ்கா வருகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய* :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக