செவ்வாய், 9 ஏப்ரல், 2019

#93 Can women serve in the Church? ஊழியக்காரி என்று வருகிறதே - பெண்கள் ஊழியக்காரி என்றால், சபையில் பேசலாமா? விளக்கம் தேவை

#93 *கேள்வி : ஊழியக்காரி என்று வருகிறதே - பெண்கள் ஊழியக்காரி என்றால், சபையில் பேசலாமா? விளக்கம் தேவை*

கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

*பதில்*
இந்த கடிதம் எழுதும் போது பவுல் – சகோதரி பெபேயாளை நினைவுக் கூறுகிறார்.

ஊழியக்காரி என்ற இந்த பதம் மூல பாஷையில் *ப்ரோஸ்டாடீஸ்* என்றிருக்கிறது. அதாவது உதவிகாரி என்று பொருள். ஊழியக்காரி / வேலைக்காரி / உதவிக்காரி (உதவுபவர்) என்கிற அர்த்தம்.

வசனம் 2ல் – இன்னும் தெளிவாக – படிக்க முடியும்.
Rom. 16:2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

பெபேயாள் – சபையில் போதிக்கும் ஊழியக்காரியாக இருந்திருக்க முடியாது. மாறாக, அலுவலக ஊழியக்காரியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனென்றால் – பெண்கள் சபையில் / ஆண்களுக்கு போதிக்க முடியாது என்று தெளிவாக வேதம் சொல்கிறது.

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனமாக வாசிக்கவும்:

1-
*ஆதி சபையில் பெண்கள் தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்*
அப். 2:17ல் நாம் பார்க்க முடிகிறது – குமாரரும் குமாரத்திகலும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் என்று.
1. பிலிப்புவின் குமாரத்திகள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் - அப். 21:9
2. கொரிந்து சபையில் தீர்க்கதரிசனம் சொல்லும் பெண்கள் இருந்தார்கள்  - 1 கொரி. 14:34
3. அன்னாள் – ஒரு தீர்க்கதரிசி (பழைய ஏற்பாட்டு காலம்) - லூக். 2:36

2-
*ஆதி சபையில் ஊழியக்காரிகள் இருக்கவில்லையா*?
புதிய ஏற்பாட்டில் நாம் காணும் ஊழியக்காரிகள் :
A. தொற்காள் – அப். 9:36-39
B. இயேசுவிற்கு ஊழியம் செய்த பெண்கள் மத். 26:7-13
C. பெபேயாள் -  ரோமர் 16:1-2
D. எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் – பிலி. 4:2-3

3-
*அப்படியென்றால் பெண்கள் சபையில் பிரசங்கிக்கலாமே*?
முடியாது, சபையில் பெண்கள் மாத்திரம் அல்ல, ஆண்களும் பிள்ளைகளும் இருப்பார்களே.
ஆண்களுக்கு போதிக்கும்படி பெண்களுக்கு வேதம் அனுமதி கொடுக்கவில்லை.

1 கொரி. 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

1 தீமோ. 2:12, உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

4-
*பெண்கள் எங்குமே பிரசங்கிக்க முடியாதா*?
பெண்கள் போதிக்கவேண்டும் என்று வேதமே சொல்கிறது. தீத்து  2:4-5
போதிப்பதையும் ஜெபிப்பதையும் வேதாகமம் பெண்களை தடைசெய்யவில்லை.

பெண்கள் போதித்தார்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். அப். 18:26; 21:9; Iகொரி. 11:5.

ஆனால்,

*பொதுவான இடத்திலோ, சபையிலோ – ஆண்கள் கூடியிருக்கும் / கலந்திருக்கும் போது பெண்கள் பிரசங்கிக்க போதிக்க அனுமதியில்லை*.

பெண்கள் குழுவிலோ, பிள்ளைகளின் மத்தியிலோ, அல்லது வேறொரு ஆணுக்கு *தன் கணவனோடு சேர்ந்து* தனியாக ஆலோசனை சொல்லவோ தடையில்லை (அப். 18:26)

நீங்கள் ரோமர் 16:1ன் அடிப்படையில் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக