*#85 கேள்வி : உலகத்தில் உள்ள அனைவரும் பரலோகம் போக என்ன வழி?*
*பதில்:*
ரொம்ப சந்தோஷம் பிரதர்.
இப்படி ஒரு கேள்வி கேட்டமைக்கு.
1Tim. 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
Mark 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
Luke 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
Rom. 10:12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தான் :
2Pe. 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஒருவர் தான் நம்மை பரலோகம் கொண்டு போக முடியும். (யோ. 14:6)
அவரை விசுவாசித்து ஏற்றக்கொண்டு ஞானஸ்நானம் பெற்று இரட்சிப்புக்குள் ஒருவன் வராவிடில் - தங்கள் ஜீவனை இழந்து போவார்கள் (மாற்கு 16:16)
இரட்சிக்கப்படாமல் இறந்து போனவர்களுக்காக நாம் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. ஒரே தரம் மரிப்பதும் பின்பு அவர்கள் நியாயதீர்ப்பு அடைவதும் நியமிக்கப்பட்ட ஒன்று (எபி. 9:27)
நன்றி பிரதர்
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக