செவ்வாய், 23 ஏப்ரல், 2019

#114 இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின் போது ஏன் கடவுள் மக்களை காப்பாற்ற வில்லை

#114 *கேள்வி* : இலங்கை யில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின் போது ஏன் கடவுள் மக்களை காப்பாற்ற வில்லை என்று  கேள்வி கேட்கிறார்கள்  அவர்களுக்கு என்னால் விளக்கம் தரமுடியவில்லை சார்


*பதில்:*
யோபு வாதிக்கப்பட்டபோது அவர் நண்பர்கள் சொன்னது:
Job 4:7-9 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும். நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.  தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.

Job 8:3-6 தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?  உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து, சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

பல நேரங்களில் தேவனுடைய ஜனங்கள் வியாதிபடும் போது தங்கள் வியாதியை வெளியே சொன்னால் தான் ஏதோ பாவம் செய்ததின் விளைவினால் தான் இது வந்தது என்று மற்றவர் கூற்றுக்கு பயந்து அமைதியாய் இருந்து விடுவார்கள்.

யோபுவை குறித்தோ  - அவர் உத்தமர் என்று தேவனே சாட்சி பகிர்ந்ததை நாம் அறிவோம். சோதனை பின்னர் தான் வந்தது !!

அப்பாவி ஜனங்கள் / கிறிஸ்தவர்கள் / ஊழியக்காரர்கள் என்று தங்கள் கிரியைகளினால் பாதுகாப்பை அதிகம் பெற்றுக்கொள்ளமுடியும் என்று யாருமே ஒஸ்தியாக நினைத்து விடமுடியாது (ஏசா 64:6) – நம் நீதியான செயல்களின் மூலமாக நாம் அப்படி எதுவும் சம்பாத்தியம் செய்து விடமுடியாது – ஆனால் கிருபையினால் மாத்திரமே அது சாத்தியமாகிறது (தீத்து 3:6)


Luk 13:2-5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?  அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

உலகத்தின் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம் – யுத்தங்களும் மரணங்களும் பூமியதிர்ச்சிகளும் நிச்சயம் சம்பவிக்கும் (மத் 24:7)

ஒவ்வொரு சம்பவங்களும் மற்றவர்களுக்கு பாடமாக கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவின் வருகை மிகசமீபமாயிற்றென்று நாம் துரிதப்படவேண்டியிருக்கிறது. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். Mat 24:33

பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய நாம் எச்சரிக்கப்படுகிறோம் !!
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்..

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்கள் – ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்படட்டும் (மாற்கு 16:16)

ஞானஸ்நானம் இன்னும் பெறாதவர்கள் – கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படட்டும்.

கிறிஸ்தவர்கள் – தங்களை சோதித்துப்பார்த்து தேவனுடைய வார்த்தையின் படி அநுதினமும் ஜெபத்திலும் அன்பிலும் நிலைத்து நிற்போம்..

மாரனாதா !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக