#113 - *இரட்சிக்கப்பட்ட கணவன் மனைவி சபையில்
இருக்கிறார்கள் இருவரில் ஒருவர் விபச்சாரச்செய்தால் குற்றத்திற்கு சபையும் என்ன
முடிவெடுப்பது? பாதிக்கப்பட்டவர் என்ன சொல்வது? கணவனைப்பற்றி? மனைவியைப்பற்றி? சபையைபற்றி?*
*பதில்:*
கணவனும்
மனைவியும் ஒன்றாய் இருக்கும் போதே விபசாரம் வருகிறது என்றால் – அவர்களுக்கு இடையில்
உறவு விரிசல் இருப்பதற்கு நிச்சயமான சாத்தியம் உண்டு.
இருவரில்
யாதொருவர் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் அதற்கு பெறும் பங்கு அவருடைய துணை
தான்.
மனைவியும்
கணவனும் தங்கள் தங்கள் கடமைகளை செய்ய / பகிர்ந்து கொள்ள தவறியிருக்கிறார்கள் (நீதி. 5:15-20) ஆகவே வேறொரு துறவை தேட வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.
இந்த குற்றத்திற்கு ஒருவர் மாத்திரமே
நிச்சயமாக காரணமாக முடியாது.
அன்பு குறைச்சல்
சதா எரிந்து
விழுதல்
தாம்பத்யத்தில்
ஈடுபட மறுத்தல்
விட்டு
கொடாமை
பொறுப்பின்மை
/ கடமையின்மை இப்படி பல காரணங்களினால் வேற்று இடத்தில் இதை பெற்றுக்கொள்ள அவர்கள்
முனைந்திருக்கலாம்.
இதன்
விளைவாக ஒருவர் முன்வந்து சபையில் தன் கணவனை/மனைவியை குறித்து முறையிடும் போது –
சபை மூப்பர்கள் அவர்களின் மூலகாரணத்தை அறிந்து அதை சீர் செய்ய கடமைபட்டிருக்கிறார்கள்
(தீத்து 1:9)
வசனங்கள்:
அவன்
செவிகொடாமற்போனால், இரண்டு
மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு
போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால்,
அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும்
ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. Mat. 18:16-17
மேலும்,
சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி
நடவாமல், ஒழுங்கற்று
நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக்
கட்டளையிடுகிறோம். 2Th. 3:6
Rom. 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும்
இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
1Co. 5:11 சகோதரனென்னப்பட்ட ஒருவன்
விபசாரக்காரனாயாவது…. இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
சபை:
ஒருபோதும் இவர்களை சபைக்கு வரகூடாது
என்று சொல்ல அதிகாரமில்லை !! (மத். 13:29-30) அவர்கள்
மனந்திரும்பும் படி எங்கு போவார்கள்? வேதாகம
வசனத்தின்படி அவர்களோடு கலந்திருக்ககூடாது (2 தெச. 3:14)
பவுல் சொன்னதன் அடிப்படையில் (1கொரி. 5:1-2) ஒருவரை
விலக்கி வைத்ததன் விளைவாக அவர் மனந்திரும்பியதை நாம் காண்கிறோமே !! (2கொரி. 2:5-11)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக