வியாழன், 4 ஏப்ரல், 2019

#86 - பூமியில் இந்த சந்ததி எப்படி வந்தது? காயீனை யார்' கொலை செய்யமுடியும்?

#86 - *ஆதாம் - ஏவாள், காயீன் - ஆபேல் மட்டுந்தானே இருந்தார்கள்? காயீனை யார் கொலை செய்ய முடியும்?*

இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர். நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன். என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.   ஆதியாகமம் 4:14, 15

பூமியில் இந்த சந்ததி எப்படி வந்தது? *ஆதாம் - ஏவாள், காயீன் - ஆபேல்* மட்டுந்தானே இருந்தார்கள்? விளக்கம் தாருங்கள்

*பதில்:*
பல பேருக்கு இந்த சந்தேகம் உள்ளது பிரதர். பலருக்கு விளங்கும்படியாய் இந்த கேள்வியை கேட்டமைக்கு உங்களுக்கு நம் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஆதி பிள்ளைகளாக காயீனும், ஆபேலும் பிறந்தனர்
காயீன் – ஆபேலை கொலை செய்த பின்னர் சேத் பிறந்தார்.

சேத் பிறந்த போது  - ஆதாம் *130 வயதுள்ளவராயிருந்தார்* (ஆதி 5:3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.)

காயீனும் – ஆபேலும் பிறந்த போது ஆதாமுக்கு எத்தனை வயது என்று வேதத்தில் சொல்லப்படவில்லை.

*நம் புரிதலுக்கென்று* கணக்கு பார்க்கும் பட்சத்தில் :
ஒருவேளை – ஆதாம் ஏவாள் உருவாக்கப்பட்ட அடுத்த 2வது ஆண்டில் முதல் பிள்ளையாகிய காயீனை அவர்கள் பெற்றெடுத்திருந்தால் – சேத் பிறக்கும் வரைக்கும் உள்ள இடைப்பட்டது 128 ஆண்டுகள்.

ஆதாமின் சந்ததியில் சேத் கணக்கில் எடுத்துக்கொள்ளபட்ட அதே வேளையில் (லூக் 3:38) சேத் பிறந்தது – குறிப்பாக 3வது பிள்ளை என்று சொல்லப்படவில்லை !!

மேலும், ஏவாள் சொல்வதைக் கவனியுங்கள்... “காயீன் கொலை செய்த *ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்*. என்பது !! ஆதி. 4:25

இடைபட்ட 128 ஆண்டுகளில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கவேண்டும். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்தவர்களாய் அவர்களும் பிள்ளைகளை பெற்றிருக்கவேண்டும்.

அவர்கள் பலுகி பெருகியிருக்க வேண்டும் – தேவ கட்டளைபடி (ஆதி. 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.)

சேத் பிறந்தபின் ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளை பெற்றனர் (ஆதி. 5:4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்)

உங்கள் கேள்வியின் விடை கிடைத்தது என்று நம்புகிறேன்

*எடி ஜோயல் சில்ஸ்பி*

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக