வியாழன், 4 ஏப்ரல், 2019

#87 கேள்வி : பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் என்னும் சொல் (வார்த்தை) தேவனை குறிக்குமல்லவா? பவுல் குறிப்பிடுவது எதினால்? எப்படி?

#87 *கேள்வி* :
பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் என்னும் சொல் (வார்த்தை) தேவனை குறிக்குமல்லவா?  பவுல் குறிப்பிடுவது எதினால்? எப்படி?

நாம் தேவனை ( பிதா) நோக்கி ஜெபிக்கும் போது கூட இடையிடையே கர்த்தர், கர்த்தாவே, ஆண்டவரே என்று பயன்படுத்துவதில்லை.
 

அப்.2:36 ன்படி ஆண்டவர், கிறிஸ்து

பதில்:
பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கர்த்தர் என்பது பொதுவாக பிதாவை குறிக்கிறதாய் இருக்கிறது.

குறிப்பிட்ட ஏறத்தாழ 57 இடத்தில் மாத்திரம் – தனிதனியாக பிதாவையோ, வார்த்தையையோ, ஆவியானவரையோ பழைய ஏற்பாட்டில் காணமுடிகிறது.

மற்றபடி ஏறத்தாழ 2601 தடவை தேவன் என்று சொல்லப்படுகிற இடங்களில் பன்மை தன்மையை தான் மூலபாஷையில் இருக்கிறது.

உதாரணத்திற்கு : ஆதி 1:1 - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

இந்த இடத்தில் தேவன் என்ற வார்த்தைக்கு ஏலோகிம் என்ற எபிரேய வார்த்தை – அதாவது பன்மை.
அங்கு தேவ ஆவியானவரும்  (வ2) வார்த்தையானவரும் இருந்தனர் (யோ 1:1-3)

வார்த்தை மாம்சமாகி உலகத்தில் இயேசு என்கிற பெயரில் வந்தார்.

உலகமானது இயேசுவை - மரியாள் வயிற்றில் பிறந்த காரணத்தால் அவர் யோசேப்பின் பிள்ளை என்று அழைக்கபடகூடாதாகையால் – தேவ குமாரன் என்று அழைக்கப்பட்டார். இதை தேவதூதனே மரியாளிடத்தில் தெரிவித்தார் (Luk 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.)

கிறிஸ்து தன்னை முழுவதுமாய் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த போது – அவரை எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை தந்தருளினார் (Act 2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்)

Php 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஆகவே புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பரமேறுதலுக்கு பின்னர் – பிரதானமாக நம்முடைய ஜெபம்
பிதாவை நோக்கி இருக்கிறது. (யோ 14:6)
அந்த ஜெபத்தை கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்கிறோம், (யோ 16:23)
ஆவியானவரின் பெலத்தோடு ஜெபிக்கிறோம். (1 பேது 1:2)

நம்முடைய ஜெபம் – பிதாவை நோக்கி இருப்பதால்
ஜெபம் ஏறெடுக்கும் போது பிதாவையே குறிப்பிடுகிறோம்.
இடைஇடையே கர்த்தாவே ஆண்டவரே என்று சொல்வது கிறிஸ்துவை குறிக்கிறது.

கிறிஸ்துவை நோக்கி ஜெபம் பண்ணி – கிறிஸ்துவினுடைய ரெக்கமன்டேஷனோடு கிறிஸ்துவினிடத்தில் ஜெபத்தை ஒப்புகொடுப்பது புரியாத வகையில் ஜெபிப்பதாகும்.

நாம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுக்கும் போதே – பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்று பிதாவை நோக்கி ஜெபம் பண்ண கற்றுக்கொடுத்து இருக்கிறாரே (மத் 6:9)

எடி ஜோயல்

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக