செவ்வாய், 30 ஏப்ரல், 2019

#130 - என் மனைவி எனக்கு கீழ்ப்படிய நான் என்ன செய்ய வேண்டும்?

#130 - *என் மனைவி எனக்கு கீழ்ப்படிய நான் என்ன செய்ய வேண்டும்?*

*பதில்:*
ஒரு கணவனாக நானும் இந்த கேள்வியை உற்று நோக்குகிறேன்.
எனக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. வேதாகமத்தின் பதிலை கீழே காணலாம் ..

கணவனும் மனைவியும் ஒரே சரீரமாய் இருக்கிறார்கள் (ஆதி 2:24)

ஆதாமின் விலா எலும்பில் (சரீரத்தின் நடுபகுதி) ஏவாளின் பங்கு (ஆதி 2:21)

மனைவிக்கு தலை (மூளையாக) கணவன் இருக்கிறான் (1கொரி 11:3)

மனைவி – தன் கணவனுக்கு கீழ்படிய வேண்டும் (1பேது 3:1, எபே 5:22, கொலோ 3:18)
மனைவி – தன் கணவனுக்கு எந்த காரியத்திலும் கீழ்படிய வேண்டும் (எபே 5:24)

ஆனால் எப்படி கீழ்படிய வைப்பது?

விரோதமாய் இருந்த போதே – கண்டாலே கல்லால் அடித்து விரட்டிக்கொண்டு இருந்த போதே – வெறுத்து விரட்டின போதே கிறிஸ்துவானவர் தன் மணவாட்டிக்காக உயிரையே கொடுத்து அவளை மீட்டார் (தீத்து 2:14, கலா 1:4, ரோ 5:8, எபே 5:26-27)

கிறிஸ்துவின் அன்பை புரிந்ததாலே அவர் மணவாட்டியாகிய நாம் அவருக்கு எல்லாவற்றிலேயும் கீழ்படிகிறோமே !!!

நாம் எவ்வளவு மீறினாலும் நம்மை விரட்டி விடாமல் நமக்காக அவர் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாரே !!!

அது போல –
ஒரு மனைவிக்கு கணவன் தான் வீட்டில் தேவை.

போதகரோ – ஊழியரோ – அப்பாவோ – மேனேஜரோ – முதலாளியோ – ஆபீசரோ – தொழிலாளியாகவோ அவள் எதிர்பார்பது இல்லை..

தன்னை நேசிக்கிற – தன்னை மட்டும் நேசிக்கிற கணவனையே அவள் வீட்டில் எதிர்பார்பாள்.

தான் தன் கணவனோடு இருக்கும் போது தனக்கு முழு பாதுகாப்பு இருப்பதாக அவள் உணரவேண்டும்.

தனக்காக தன் கணவன் எதையும் செய்வான் என்ற நம்பிக்கை வரவேண்டும்.

அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் போது – தானாகவே மனைவியின் கீழ்படிதலை எந்த கணவனும் அனுபவிக்க முடியும்..

இன்னும் இதை குறித்து அதிகம் எழுத எனக்கு ஆசை தான் – நேரம் மிக குறைவு.

இந்த அருமையான கேள்விக்காய் மிக்க நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +918144776229 (India) 


*Q&A Book ஆர்டர் செய்ய* :

https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2


*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:

https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H


*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக