பைபிளில் ஏன் வேற்று
கிரகங்களை குறித்து இல்லை மற்றும் பூமி தோன்றி 4.5 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன ...ஆனால் பைபிள் படி நாம் கி.மு 400 to கி.பி 2019 வரை கிட்ட தட்ட சுமார் 10000 ஆண்டுகள் பூமியின் வரலாறு காண முடிகிறது அது எப்படி
*பதில்:*
போதுமான அளவிற்கு வேற்று கிரகங்களை
வேதாகமத்தில் நாம் காணமுடியும். எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் நம் தேவனல்லவா!!
ஆதி. 1:1ம் வசனத்திற்கும் 3ம் வசனத்திற்கும்
உள்ள நாட்களை நாம் அறியோம். ஆண்டுகள் பல இருந்திருக்கலாம்.
ஆதியிலே – என்பது எப்போது? நாம் அறியாத
ஒன்று...
*வசனங்கள் கீழே:*
எபி. 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;
இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
எபி. 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
எரே. 33:22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆதி. 15:5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
சங். 8:3 உமது விரல்களின்
கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
ஆமோஸ் 5:8 அவர் அறுமீனையும்
மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக