ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

#127 - இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்ளுவது சரியா?

#127 - *பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பது சரியா அல்லது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்ளுவது சரியா?* ஆனால் அப்போஸ்தலர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் இல்லையே? எது சரி ?

*பதில்*:
உங்கள் கேள்வி நியாயமானதே.

தமிழ் வேதாகமம் கிரேக்க பாஷையலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். சில நேரங்களில் மொழிபெயர்க்கும் போது வார்த்தையின் ஆதிக்கம் மாறிவிடும்.
 
மூலபாஷையில் *ஒனாமா* என்ற கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
*ஒனாமா என்றால் அதிகாரம் என்று அர்த்தம்*.

*இயேசு கிறிஸ்து எப்படி ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்றார்*?
மத். 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..என்ற கட்டளையை நாம் பார்க்கிறோம்.

அப்போஸ்தலர்கள் அனைவரும் கிறிஸ்துவின் கட்டளைபடி அதாவது அவருடைய (இயேசுவின் நாமத்தில்) / அதிகாரத்தின் படி ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

இயேசுவின் நாமத்தில் என்றால்
இயேசுவின் அதிகாரத்தில்
இயேசு சொன்னபடி
அவர் கொடுத்த அதிகாரத்தின்படி
அவர் சொன்ன கட்டளையின்படி ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று பொருள்.

இந்த அர்த்தம் புரியாமல் இயேசுவின் நாமத்தில் (பெயரில்) மாத்திரம் ஞானஸ்நானம் கொடுப்பவர்கள்: இயேசுகிறிஸ்துவை மாத்திரம் பிடித்துக்கொண்டு, பிதாவானவரையும் பரிசுத்த ஆவியானவரையும் மறுக்கிறவர்களாகி விடுவார்கள் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

4 கருத்துகள்:

  1. Question raised by +91 9738 74819

    பிரதர்

    எது சரியான ஞானஸ்நானம்

    1) பிதா குமாரன் பரிசுத்த ஆலியின் நாமத்திலே... எடுப்பது

    அல்லது

    2) கிறிஸ்து_வின் பெயரில் எடுப்பது.

    என்பதை நேரடியாக வசன ஆதரத்தோடு சொல்லாமல்

    ஏன்

    வேத வசனத்தின்படி ஞானஸ்நானம் கொடுக்கிறவர்களை குற்றப்படுத்துகிறீர்கள்...

    உங்கள் குற்ற சாட்டு கீழே Screen Shot...யில் இருக்கு பாருங்கள்..
    (பல விஷயங்களை மிக சரியாக தெளிவாக சொல்லுகிற /எழுதுகிற தாங்கள் இந்த ஞானஸ்நானம் விஷயத்தில் தவறாக இருப்பதாக எனக்கு தெரிகிறது

    ஆகவே என் சந்தேகத்தை நீங்கள்

    மேற்சொல்லியதில் எப்படி ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள் அல்லது எடுக்கிறீர்கள்
    என்பதை தெளிவு படுத்துங்கள்...

    [16:50, 23/10/2019] Eddy Joel: உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி பிரதர்
    இந்த பதில் - அந்த குறிப்பிட் கேள்வியின் தலைப்பிற்குரியது.

    [16:51, 23/10/2019] Eddy Joel: ஞானஸ்நானம் எப்படி எடுக்கவேண்டும் எதற்கு எடுக்க வேண்டும் ஏன் எடுக்க வேண்டும் யாரால் கொடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பல பதில்களை பார்த்தார்கள் நம் குழுவினர்.

    [16:53, 23/10/2019] Eddy Joel: ஞானஸ்நானம் ஞானஸ்நானம் - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரால் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் என்னுடைய பதிவின் கடைசியில் சொல்லப்பட்ட வரிகளில் உள்ளதை கவனிக்கவும் !!
    நன்றி

    [16:55, 23/10/2019] Eddy Joel: இயேசுவின் நாமத்தினால் மாத்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் வேதத்தின் படி கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

    [18:50, 23/10/2019] +91 97388 74819: நான் இவைகளை எதையும் மறுக்கவில்லை பிரதர்

    [18:57, 23/10/2019] +91 97388 74819: ////// இயேசுவின் நாமத்தினால் மாத்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் வேதத்தின் படி கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா? ///////

    நான் சொல்வது இருக்கட்டும் பிரதர்

    நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இயேசு கிறிஸ்து நாமத்தில்
    ஞானஸ்நானம் எடுப்பது

    அல்லது

    இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது தவறு என்று சொல்லுகிறீர்களா ?

    அல்லது

    பரிசுத்த வேதம் இயேசுகிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவோ அல்லது

    இயேசுகிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கவோ கூடாது
    என வேத வசனம் சொல்லுகிறதா என்பதை தெளிவு படுத்துங்கள் பிரதர்

    [19:17, 23/10/2019] Eddy Joel: உங்களுடைய இந்த கேள்வியை பார்க்கும் போது என்னுடைய பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது.

    #127 பொருமையாக படிக்கவும். உங்கள் கேள்விக்கு அதில் விடையுள்ளது.

    [19:58, 23/10/2019] +91 97388 74819: உங்கள் பதிவை பல முறை படித்த பிறகு தான் என் கேள்விகளை கேட்கிறேன் பிரதர்..

    ஆகவே

    தாங்கள் நேரடியாக என் கேள்விக்கு பதிலை கொடுங்கள்...

    [21:14, 23/10/2019] Eddy Joel: என்னுடைய பதிவை நீங்கள் பல தடவை வாசித்தேன் என்கிறீர்கள்.
    அப்போதும் புரியவில்லை என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது !!

    இயேசு கிறிஸ்து எப்படி ஞானஸ்நானம் கொடுக்க சொன்னார்?

    ..... சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள் என்றார். மத் 28:19

    அதன்படி சீஷர்கள் இயேசுவின் கட்டளைபடி எல்லாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். நாமம் என்றால் கட்டளை / ஒனாமா என்று கிரேக்க வார்த்தையை நாமம் என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

    கட்டளைபடி என்றால் என்ன?
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுக்க வேண்டும் என்பதே கட்டளை.

    இந்த வகையின் அர்த்தத்தை புரியாமல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் கொடுக்க கூடாது ஆனால் இயேசுவின் நாமத்தில் கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள் தங்கள் அறியாமையில் உள்ளார்கள் என்பது வேத வசனத்தின் படி தெளிவாக புலப்படுகிறது.

    கிறிஸ்துவின் கட்டளைபடி ஞானஸ்நானம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் கொடுக்கப்பட வேண்டும் – மத் 28:18-19


    பதிலளிநீக்கு
  2. [21:16, 23/10/2019] +91 97388 74819: ////// ஞானஸ்நானம் - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரால் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் என்னுடைய பதிவின் கடைசியில் சொல்லப்பட்ட வரிகளில் உள்ளதை கவனிக்கவும் !!
    நன்றி ///////

    தாங்கள் சொல்லுவது போல் ( பிதா குமாரன் பரி ஆவியின் பெயரால்) ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால்

    அப்போஸ்தலர்கள் இப்படி ( பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே என சொல்லி ஞானஸ்நானம் கொடுத்தாக வேத வசனத்தில் இல்லையே...

    இப்போது

    தாங்கள் சொல்லுவது போல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே எடுப்பதே அல்லது கொடுப்பதே
    சரி என்றால்

    சீஷர்கள்
    இயேசு கிறிஸ்து நாமத்தில் கொடுத்தது
    அதை விசுவாசித்து எடுத்ததும்
    தவறு என்று ஆகிவிடுகிறதே... பிரதர்

    ஆகையால்

    இதை தெளிவு படுத்துங்கள்... பிரதர்
    [21:18, 23/10/2019] Eddy Joel: Pls read my above post..
    Answer is there..
    kindly read slowly and i hope you will understand
    Thanks
    [06:22, 24/10/2019] +91 97388 74819: சரி தாங்கள் சொல்லியுள்ளீர்கள்

    என் கேள்வி

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே யார் ஞானஸ்நானம் கொடுத்தது..

    ஆதாரத்தை வேத வசனத்தோடு எழுதுங்கள் பிரதர்
    [06:43, 24/10/2019] Eddy Joel: நாமம் என்னும் வார்த்தைக்கான புரிதல் இன்னும் நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

    நாமம் என்றால் பெயர் அல்ல

    சொல்படி அல்லது அதிகாரத்தின்படி என்று பொருள்

    வேத எழுத்தாளர்கள் யாரும் தமிழில் எழுதவில்லை.
    அவர்கள் எழுதியது கிரேக்க பாஷையில்
    அதை மொழி பெயர்த்தவர்கள் 1770களின் சமஸ்கிருதம் வழி வந்த தமிழ் அறிஞர்கள்.

    ஆகவே தான் ஸ்நானம் தேவன் போன்ற சமஸ்கிருத சொற்கள் வேதத்தில் உள்ளது.

    இயேசுவின் நாமத்தில் என்றால் - இயேசுவின் கட்டளைபடி என்று பொருள்.

    அவர் கட்டளைபடி ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.
    ஏனென்றால் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கட்டளையிட்டது யார்?

    இந்த அர்த்தத்தை புரியாமல் இயேசுவின் பெயரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று வாதாடுபவர்கள் தானாகவே பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் அங்கீகரிக்காமல் விட்டுவிடுவதை உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. /////// நாமம் என்னும் வார்த்தைக்கான புரிதல் இன்னும் நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

    நாமம் என்றால் பெயர் அல்ல

    சொல்படி அல்லது அதிகாரத்தின்படி என்று பொருள்.//////

    அருமை பிரதர்

    தாங்கள் இதை எழுதிய பிறகு *நாமம் என்றால் பெயர் அல்ல

    அதிகாரத்தின்படி* என்பதை

    புரிந்துக்கொண்டேன்…


    ஆனால்

    அப்போஸ்தலர்கள் எந்த ஒரு ஞானஸ்நான நிகழ்விலும் தாங்கள் சொல்லும் மேற்சொன்ன இந்த விளக்கத்தை சொல்லி ஞானஸ்நானம் கொடுக்கவில்லை..

    மேலும்

    இயேசுவின் நாமத்தில் என்றால் - இயேசுவின் கட்டளைபடி என்று பொருள்.
    என
    தாங்கள் சொல்லும் விளக்கத்தையும்
    அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை…

    என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்…

    தயவு செய்து

    வேதத்தில் எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்..

    வேத வசனத்தில் இருந்தால் இருக்கு என வசனத்தை ஆதரமாக காட்டுங்கள்.
    வேத வசனத்தில் இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள்….
    அது போதும்

    அதைவிட்டு

    /////// இந்த அர்த்தத்தை புரியாமல் இயேசுவின் பெயரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று வாதாடுபவர்கள் தானாகவே பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் அங்கீகரிக்காமல் விட்டுவிடுவதை உணர வேண்டும்./////

    என எழுதி

    சீஷர்களை குற்றப்படுத்த வேண்டாம்
    காரணம்
    சீஷர்கள் தான் நேரடியாக கீழ்கண்டவாறு சொல்லுகிறார்கள்:-

    38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

    15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

    5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

    உங்கள் கூற்றின்படி பார்த்தால்
    இயேசுவின் பெயரால் ஞானஸ்நானம் கொடுத்த அப்போஸ்தலர்கள் தானாகவே பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் அங்கீகரிக்காமல் விட்டுவிட்டார்கள் என சொல்லுகிறீர்களாக
    சொல்லுங்கள்

    இது மட்டுமல்ல

    கிறிஸ்து சொல்லுகிறார்

    47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

    பவுலுக்கு உபதேசத்தை கற்றுக்கொடுத்த கிறிஸ்து பவுல் மூலமாக சொல்லுகிறார்.

    17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

    வார்த்தையில் சொன்னாலும்
    கிரியையில் (வேலை / செயல்) செய்தாலும்..
    எதைச் செய்தாலும், (எதைச் என்றால் எதுவாக இருந்தாலும்)
    அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து,
    கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
    என்கிறாரே அன்றி வேறு பொருள் இல்லை…

    அப்புறம்
    பாவ மன்னிப்புக்கு (இரட்சிப்புக்கு) ஒரு பெயர் (நாமம் உங்க வார்த்தயின்படி அதிகாரம் / கட்டளை) உண்டு என்றால் அது கர்த்தராகிய இயேசு மட்டுமே

    கடைசியாக
    கிறிஸ்து மத்தேயு 28:19_யில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து என சொன்னாரே அன்றி

    இந்த வசனத்தை அப்படியே கிளிப்பிள்ளைப்போல் சொல்லி ஞானஸ்நானம் கொடுங்கள் என சீஷர்களுக்கு சொல்லவில்லை…

    அப்புறம்
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம்
    கொடுப்பதுதான் சரி என்றால் இது மாதிரி சீஷர்கள் ஏன் செய்யவில்லை? சொல்லுங்கள்

    கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
    கொடுப்பது தவறு
    என தாங்கள் சொன்னால்

    *அந்த தவறை செய்தவர்கள் அந்த தவறை தொடங்கி வைத்தவர்கள்
    சீஷர்கள் தான்…*
    என்பதை மறக்க வேண்டாம்..

    எனக்கு தெரிந்து நேரடியாகவே சுமார் 7 இடங்களில்
    கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம்
    கொடுக்கப்பட்டு இருக்கு

    ஆனால்

    ஒரே ஒரு இடத்தில் கூட
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை…
    நீங்கள் சொல்லுகிற விளக்கத்தையும் வேத வசனத்தில் நான் காணவில்லை..



    அன்புடன்

    ஆ. பிரேம் சாமுவேல்.., ❣✝❣

    பதிலளிநீக்கு
  4. [10:25, 24/10/2019] Eddy Joel: அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்தால் (இயேசுவின் கட்டளைபடி) ஞானஸ்நானம் கொடுத்த வசனம் என் பதிவில் ஏற்கனவே இருக்கிறது. கவனமாக படித்து புரிந்து கொள்ளவும்.
    [10:28, 24/10/2019] Eddy Joel: வசனங்களை படிப்பது மாத்திரம் அல்லாமல் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
    [10:29, 24/10/2019] Eddy Joel: வசனத்தை ஏற்றுக்கொள்ளுவதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் பிரியம்.
    [10:39, 24/10/2019] Eddy Joel: அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்தது - இயேசுவின் கட்டளைபடி.

    அது எந்த கட்டளை என்று உணராமல் இயேசுவின் பெயரால் மாத்திரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஞானஸ்நானம் கொடுப்பவர்கள் - பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் அங்கீகரிக்காதவர்கள்.

    அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுக்கும்போது - இயேசுவின் கட்டளைபடி ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அது என்ன கட்டளை ??

    வாதம் செய்து கொண்டேயிருந்தால் - மனம் திறக்காது.
    வசனத்தை ஏற்றுக்கொள்வதும் / புரிந்து கொள்வதும் / முரண்படுவதும் உங்கள் விருப்பம்.

    1கொரி 3:15

    பதிலளிநீக்கு