வெள்ளி, 19 ஏப்ரல், 2019

#108 - பொிய வியாழன், பொிய வெள்ளி என்று கடைபிடிக்கிறார்களே? விளக்கவும்.

#108 - *பொிய வியாழன், பொிய வெள்ளி என்று கடைபிடிக்கிறார்களே*? விளக்கவும்.

*பதில்*:
இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட இரவை பொிய வியாழன் என்றும்,
சிலுவையில் அறையப்பட்ட தினத்தை பொிய வெள்ளி என்றும் சொல்கிறார்கள்.

இந்த வருடம் ஒரு தேதியில் பொிய வெள்ளியாக ஒரு தரப்பினர் கடைபிடிக்கின்றார்கள் என்றால் போன வருடம் எந்த தேதி என்று அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள்? காலன்டரை பார்க்காமல் அவர்களால் சொல்லமுடியாது.

*வருடாவருடம் ஈஸ்டர் தேதி எப்படி நிர்ணயிக்கிறார்கள்?*
ஒவ்வொரு வருடமும் – மார்ச் 21ம் தேதியை மையமாக வைத்து – அந்த தேதிக்கு பின் வரும் பவுர்ணமியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஈஸ்டர் என்று தீர்மானிக்கிறார்கள்.

ஈஸ்டர் என்று குறித்த நாளின் முந்தய வியாழன் மற்றும் வெள்ளியை பொிய வியாழன் – பொிய வெள்ளி என்றும் கணக்கிடுகிறார்கள்.

அந்த ஞாயிற்றுகிழமையிலிருந்து பின்னோக்கி உள்ள 40வது நாளை லெந்து நாட்களின் துவக்கம் என்று குறிக்கிறார்கள்.

*கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்:*
சாம்பல் புதன் – ஈஸ்டரிலிருந்து 46 நாள் முன்னர்
குருத்தோலை ஞாயிறு – ஈஸ்டருக்கு 7 நாள் முன்பு – அதாவது முந்தய ஞாயிறு
பெரிய வியாழன் – ஈஸ்டருக்கு 3நாளுக்கு முந்திய நாள்
பெரிய வெள்ளி - ஈஸ்டருக்கு 2நாளுக்கு முந்திய நாள்
பரமேறிய நாள் – 39வது நாள் ஈஸ்டர் கழித்து

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கலாமா என்கிற ஒரு கேள்வி எழும் பட்சத்தில் நாம் வேதத்தை ஆராய்ந்து பார்க்க கடமை பட்டிருக்கிறறோம்.
ஏசா. 1:13-14 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.

மாதப்பிறப்புகள் என்பது – பவுர்ணமியை சொல்கிறது !!

இப்படிப்பட்ட நாட்களை வகுத்ததும் / குறித்ததும் / அறிமுகப்படுத்தியதும் கத்தோலிக்கர்கள்.

ஆதி கிறிஸ்தவர்களோ, அப்போஸ்தலர்களோ கடைபிடித்ததாக வேதாகமத்தில் இல்லை.

வேதாகமத்தில் / அப்போஸ்தலர்கள் சொல்லாத செய்யாத எதையும் நாம் கீழ்படியும் போது – வேதத்திற்கு முரணானது !!

தமிழ்நாட்டில் கலாசாரத்திலும் இந்துக்கள் முறைமைகளிலும் அவர்கள் கும்பிடும் தெய்வங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஊர் எல்லையை காக்க ஒரு சாமி, படிப்பு நல்லா வரணும் என்பதற்காக ஒரு சாமி என்று பல தெய்வங்கள் உள்ளது போல வசந்த கால தெய்வம் என்கிற கிரேக்கர்கள் கும்பிட்டு வந்த விக்கிரகம் இஷ்டார் என்கிற தெய்வம்.

விபசாரத்தில் பிறந்த தன் குழந்தையை ஊரே கும்பிடும்படி சூரிய கடவுள் தினமாக கிரேக்க ராணி மாற்றியதை கத்தோலிக்கர்கள் காலப்போக்கில் கிறிஸ்து பிறந்த தினமாக கிறிஸ்துமஸ் என்று கொண்டு வந்ததைப் போல இஷ்டார் தெய்வத்தை வணங்கும் விக்கிரக ஆராதனை பண்டிகையையும் ஈஸ்டர் தினமாக மாற்றினார்கள் !!

பெந்தேகோஸ்தே அமைப்பினர் கூட காலப்போக்கில் இப்போது ஈஸ்டர் கொண்டாட, கடைபிடிக்க துவங்கியது வேதத்தை மறக்கடித்து மனித கோட்பாட்டை பின்பற்றும்படி முயற்சி செய்து வருகிற பிசாசின் மிகப்பெரிய வெற்றி !!

ஆனால், இதை ஒரு விசேஷ நாள் என்று கருதி, இது வரை கூடுகைக்கு வராதவர்கூட இந்த நாளில் கூடி வரும் ஜனங்களுக்கு *உண்மையான சுவிசேஷத்தை* கூறும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் !!

கிறிஸ்தவத்திற்கும் ஈஸ்டருக்கும் சம்பந்தமில்லை.
கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்துமஸிற்க்கும் சம்பந்தமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

References:

1- https://en.wikipedia.org/wiki/Easter
2- History of the Christian Church, Volume III: Nicene and Philip Schaff Post-Nicene Christianity. A.D. 311-600, pg 229, 119, 186
3- https://www.lavistachurchofchrist.org/cms/are-these-points-about-easter-true/
4- https://theconversation.com/why-easter-is-called-easter-and-other-little-known-facts-about-the-holiday-75025#:~:text=The%20naming%20of%20the%20celebration,seventh%20and%20early%20eighth%20century.
5- https://www.lavistachurchofchrist.org/cms/observing-holidays/
6- https://www.history.com/topics/holidays/history-of-easter
7- HISTORY of the CHRISTIAN CHURCH by PHILIP SCHAFF, VOL. IV. MEDIAEVAL CHRISTIANITY, From Gregory I to Gregory VII, A.D. 590-1073
8- https://www.ccel.org/ccel/schaff/hcc1.i.v.4.html
9- https://www.lavistachurchofchrist.org/cms/why-did-catholicism-start-and-when-did-it-happen/
10-https://www.crosswalk.com/special-coverage/easter/who-is-eostre-and-what-does-she-have-to-do-with-easter.html
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக