#82 கேள்வி: எபிரெயர் புஸ்தகத்தை எழுதின ஆசிரியர் யார்?
துவக்கமும், முடிவும் பவுலுடைய
எழுத்து நடை இல்லையே
விளக்கம் தேவை
ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி தெளிவாக
தெரிந்தவர்கள்தான் யாரே எழுதியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து
பதில்:
நீங்கள் சரியான கணிப்பு தான் செய்திருக்கிறீர்கள் பிரதர்.
1-
எபி 2:3ம் வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்
போது பவுல் இந்த நிருபத்தை எழுதியிருப்பதற்கு குறைவான சாத்தியம் தான்.
2-
பவுல் எழுதிய மற்ற நிருபங்களில்
காணும் வழக்கமான வாழ்த்துகளில் தன்னுடைய பெயரை குறிப்பிடும் பழக்கத்தை இந்த
நிருபத்தில் காணவில்லை.
3-
வேத வல்லுநர்களின் கூற்றுபடி – எபிரேய
புஸ்தகத்தில் உபயோகபடுத்தப்பட்ட வார்த்தைகளும் பழைய ஏற்பாட்டு வசனங்களை கோடிட்டு
காட்டின விதங்களையும் பார்க்கும் போது – முழுக்க முழுக்க எபிரேய பாஷையை மாத்திரமே
கொண்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கமாக பவுலின் நிருபங்களில் கிரேக்க
மொழிபெயர்ப்பும் கலந்தே இருக்கும்.. அந்த முறை எபிரேய நிருபத்தில் இல்லை.
4-
வழக்கமாக இயேசுகிறிஸ்துவை குறிக்கும்
போது பவுல் பலவிதமான Titles உபயோகப்படுத்தும் முறை இந்த எபிரேய
நிருபத்தில் இல்லை.
ஆகவே பவுலோடு நெருக்கமாக இருந்த சிலரால் இந்த நிருபம்
எழுதப்பட்டிருக்கலாம்... லூக்கா / பர்னபா / அர்கிப்பு / எப்பாப்பிராத்து
*** மறைக்கபட்டவகைளை நாமும் விட்டுவிடுவதால் (உபா
29:29)
இந்த நிருபத்தை எழுதியவர் யார் என்று நாமும்
கணிக்காமல் – ‘யாரோ’ (Unknown) என்றே கருதுவோம்.
இந்த நிருபத்தை பவுல் எழுதியதாக பலர் கூறுக்கொள்வது
வேதத்தின்படி சரியானதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக