#73 “*தேர்தலை குறித்த கேள்விகளும் அதற்கு வேதாகமத்தின் ரீதியாக கிடைக்கும் பதில்களும்*”
*பதில்*
"...*நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே*, யாருக்குத்
தெரியும் …. எஸ்தர் 4:14"
1-
*கிறிஸ்துவர்கள் தேர்தலையும் அரசாங்கம் அமைவதை குறித்தும் பேசலாமா*?
ஒரு குறிப்பட்ட கட்சியையோ நபரையோ நான் சுட்டிகாட்டாதபடிக்கு எப்படிப்பட்ட நிர்வாகி அல்லது ஆட்சியாளர் அமையவேண்டும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
எந்த பிரிவினர் அல்லது நபராயிருந்தாலும் - *வேதத்திற்கு புறம்பான காரியத்தை*
செய்தவர்களோ அல்லது செய்வதற்கு ஆதரவாக இருக்கிறவர்களையோ கிறிஸ்தவர்கள் ஆதரவளிப்பது - *அவர்களுடைய பாவத்திற்கு
இவர்களும் ஒத்துபோகிறார்கள்*
என்றே பொருள்.
இது வரைக்கும் நடந்த வெகு சில சம்வங்களை நிணைப்பூட்ட விரும்புகிறேன்:
* தொழுகை நடத்த தடைசெய்வது
* சட்டபடி போதிய அதிகாரமும் அங்கீகாரமும் இருந்த போதும் -- தொழுகை நேரத்தில் குண்டர்களோடு வளாகத்திற்குள் நுழைந்து ஊழியரை அடித்தும் தொழுகை இடங்களை சேதப்படுத்தியது.
* சமாதான வாழ்க்கை முறைக்கு குந்தகம் விளைவிப்பது
* விக்கிரக ஆராதனையை ஊக்குவிப்பது / மற்றவர்களிடம் திணிப்பது.
* சொந்த வீட்டில் கூடி ஜெபிப்பதை எதிர்ப்பது
* சொந்த விருப்பபடி ஞானஸ்நானம் எடுத்தவர்களை துன்புறுத்துவது. போன்ற பல பல பல ஏராளமான வேதத்திற்கு விரோதமான செயல்களை நீங்களும் ஆதரிப்பதாகிவிடாதோ?
ஆகவே நிச்சயமாக பாவகாரியத்திற்கு எதிராக *கிறிஸ்தவர்கள் குரல் கொடுக்கவேண்டும்* என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வசனத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும்.
* கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். *கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்*. எபே
5:10-11
* தாவீது தவறு செய்த போது – *நாத்தான் தீர்க்கதரிசி அவரை கடிந்து
கொண்டார்* – 2
சாமு 12:1-15
* விக்கிரகங்களை உருவாக்கிய போது –
யெரொபெயாம் *தீர்க்கதரிசியினால் கடிந்து கொள்ளப்பட்டார்* - 1 இராஜா 13:1-9
* ஏரோதின் திருமணத்தை குறித்து *யோவான் ஸ்நானன் கடிந்து கொண்டார்* – மத் 14: 1-4
* அதிபர் பேலிக்ஸ்க்கு நீதியைகுறித்தும் சுயகட்டுபாட்டைகுறித்தும்,
தான் *எப்படி நியாயதீர்ப்பு அடையப்போகிறார்
என்பதை குறித்தும் பவுல் விவரித்தார்*
– அப் 24:25
*ஆகவே, மொளனமாயிருப்பதல்ல, கிறிஸ்தவர்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்*.
2-
*எப்படி அரசாங்கம் அமைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம், ஆகவே, நாம் ஒன்றுமே செய்யக்கூடாது, அமைதியாக இருங்கள்
என்று வேதம் சொல்லவில்லை. தேவனுடைய திட்டத்தை “செயல்படுத்த வேண்டிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் நம் கடமை இருக்கிறது” என்று கீழே உள்ள உதாரணங்கள் மூலம் காணமுடியும்*.
* யூதர்களை காப்பாற்ற இராஜாத்தி எஸ்தர் நடவடிக்கை எடுத்தார் – எஸ்தர் 8:1-14
* தவறாக தன்னை சிறையில் வைத்த சிறைசாலை அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும்படி தன் குடியுறிமையை கொண்டு பவுல் வலியுறுத்தினார் – அப். 16:25-40
* தான் கசையடிக்கப்பட போவதை உணர்ந்த பவுல் - தன் குடியுறிமையினால் அதை நிறுத்தினார் – அப். 22:24-29
* அரசாங்கத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி,
தான் கொல்லப்படுவதற்கு திட்டம் தீட்டினவர்களை அடையாளம் காட்டி தன்னை காப்பாற்றிக்கொண்டார் – அப். 23:12-33
* தனக்கு எதிரான ஒரு வழக்கை தீர்த்து வைக்க சட்டத்தை பயன்படுத்தினார் பவுல் – அப். 25:10-12
3-
*இராஜாக்களையும் அதிகாரத்தையும் தேவன் தன் சித்தப்படி ஏற்படுத்துகிறார் என்று நாம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் கவனிக்க வேண்டியது*.
தற்போது நடைமுறையில்
இருப்பது *இராஜாக்கள்
முறையல்ல* - பெருவாரியான *ஜனங்களின் ஓட்டுக்களை* பெற்றவர்கள், ஆட்சியில் அமறும் முறை.
ஆகவே, *தேவனுடைய சித்தத்திற்கு
எதிரானவர்கள்* ஆட்சியில் வராமல் இருக்கவேண்டிய *ஓட்டு உரிமையை பயன்படுத்த
வேண்டிய
அவசியத்தில் இருக்கிறோம்*.
* அரசாங்க அதிகாரிகள் தான் தேவ ஊழியனாய் இருக்கிறான் என்கிறது வேதம் ரோமர்
13:1-7. ஆகவே,
அப்படிப்பட்ட இடத்திற்கு
*தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்
உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்*.
* யார் அல்லது எப்படிபட்டவர்கள் ஆட்சியில் வந்தாலும்,
அவர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும் -1தீமோ. 2:2-3
4-
*நாம் ஓட்டுப்போட்டால், ஒருவேளை தேவசித்தத்திற்கு எதிராக வந்து விடாதா*?
* நம் ஆகாரத்திற்காக ஜெபிக்கவேண்டும் என்று சொல்கிறது வேதம் (மத். 6:11). அதே
வேளையில்,
ஆகாரத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் சொல்கிறது
2தெச. 3:10
நாம் வேலை செய்வது என்பது நம் ஜெபங்களுக்கு பதிலளிப்பதில் இருந்து கடவுளைத் தடுக்கிறது என்பதல்ல. மாறாக நம் ஜெபத்திற்கு நம் கிரியைகளை பொருத்துகிறோம். முடிவோ நம் கடின உழைப்பின்படி அல்ல,
தேவனுடைய ஆசீர்வாதங்களை / சித்தத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
* நாம் ஆரோக்கியத்திற்காக ஜெபிக்க வேண்டும் - III யோவான்
2
ஆனால் நம் ஆரோக்கியம் மோசமாக இருக்கும்போது மருத்துவர்களிடம் செல்கிறோம். நம் ஜெபத்தோடு நம் கிரியைகளையும் செய்யவேண்டியது நமக்கு கொடுக்கபட்ட கட்டளை – இங்கும் நம் செயல்களை பொருத்துகிறோம். இறுதியில்,
சுகமானது மருத்துவரினால் மாத்திரம் அல்ல – தேவ ஆசீர்வாதத்தினாலும் சித்தத்தினாலும் சுகம் பெற்றுக்கொள்கிறோம்.
* ஓட்டுப்போடவேண்டும் என்பது அரசாங்கத்தின் கட்டளை.
அதை மீறுவது அரசாங்கத்தை எதிர்ப்பதாகும். ஆகவே, கட்டாயம் ஒட்டுப் போடவேண்டும்.
5-
*நாம் விரும்பும் காரியங்களுக்காக ஜெபித்தாலும் தேவன் எதை விரும்புகிறாரோ அது தானே நடைபெறும்*?
* பவுலுக்கு ஒரு பிரச்சனை இருந்தது - II கொரிந்தியர்
12: 7-10. ஆனால் பவுல் அதை விரும்பவில்லை,
ஆனால் அது தேவடைய நோக்கமாக இருந்தது என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டார்.
* இயேசு,
தான் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படப் போகிறார் என்பதை அறிந்திருந்த போதும் அவை விலகக் கூடுமானால் விலகட்டும் என்று ஜெபித்தார் மத்தேயு 26: 36-39. அவர் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டார்.
ஆகவே,
* யோனாவின் நாளில் நினிவே செய்தது
போல் சில நேரங்களில் அரசாங்கம் அமையலாம் (யோனா 3: 4-10)
* நம் கடமையை தேவ சித்தப்படி நாம் உணர்ந்து செயல் படும் படி மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும். உபதேசியாளர்களுக்கு
அது மிக மிக அவசியமான கடமை.
*முடிவு தேவ சித்தப்படி நடக்கும்*.
*ஏதாவது
காரணங்களை / சாக்குபோக்கு சொல்லி யோனாவை போல – தர்ஷீசுக்கு ஓடிப்போய் விடகூடாது*. !!
...நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே,
யாருக்குத் தெரியும்... எஸ்தர் 4:14….
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
--------------------*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக