#60 - *தேவனுடைய சபை என்று வேதத்தில் பல இடங்களில் போட்டிருக்கும் போது
ஒரே ஒரு இடத்தில் வரும் கிறிஸ்துவின் சபை என்று ஏன் போட்டுக்கொள்கிறீர்கள்?*
*பதில்* : இந்த
கேள்வியை கேட்டதற்காக சந்தோஷப்படுகிறேன். பதில்கள் எல்லாம் மற்றவர்களுக்கும்
பிரயோஜனமானவையாகையால் அந்த பலன் உங்களையும் சார்ந்தது..
ஜனங்கள் அனைவரும் பிதாவாகிய
தேவனுக்காக படைக்கப்பட்டோம் – ஏசா 43:21
அவருடைய சமூகத்திலிருந்து பாவமானது மனிதனை தூரமாக்கிவிட்டது – ஏசா 59:2
பாவத்தை எடுத்துப்போட பாவமில்லாத தேவன் தாமே தன் குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி மனுகுலத்தை மறுபடியும் தம்மோடு (பிதாவோடு) சேர்த்துக்கொள்ள வகை வகுத்தார் – 2கொரி 5:18
இங்கு பூமியில்
வந்தது – தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
என் சபையை கட்டுவேன் என்றார் இயேசு (மத் 16:18 மேலும்,
நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ
பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்
கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.)
இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் சபையில் (தன் சரீரத்தில்) சேர்த்தார் (அப்2:47)
எபே
5:25-27 புருஷர்களே, உங்கள் மனைவிகளில்
அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில்
அன்புகூர்ந்து, *தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால்
சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான
மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும்* தம்மைத்தாமே அதற்காக
ஒப்புக்கொடுத்தார்.
கொலோ 1:18 அவரே
சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும்
முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து
எழுந்த முதற்பேறுமானவர்.
இரட்சிக்கப்பட்டவர்கள்
– கிறிஸ்துவின் சரீரத்தில் ஓர் அங்கம் (எபே 5:30 நாம் அவருடைய சரீரத்தின்
அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய
எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்)
மனைவிக்கு
அவள் புருஷன் தலை
புருஷனுக்கு
கிறிஸ்து தலை
கிறிஸ்தவிற்கு
தேவன் (பிதா) தலை – 1கொரி 11:3
இரட்சிக்கப்பட்டவர்கள்
நடந்துகொள்ள வேண்டிய முறையை *பிதாவானவர்
கிறிஸ்துவின் மூலமாக*
நமக்கு தன் கட்டளையை கொடுத்தார்.
கிறிஸ்துவின்
இராஜ்ஜியத்தில் நாம் இருக்கிறோம்.
கிறிஸ்துவின்
ஆளுகையில் நாம் இருக்கிறோம்.
சபையானது
கிறிஸ்துவின் இராஜ்ஜியமாய் இருக்கிறது – கொலோ 1:13,
1கொ 15:23-25
ஆகவே
தான் கிறிஸ்துவின் நாமத்தை சபையினர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் - ஒட்டு
மொத்தமாக *நாமும்
கிறிஸ்துவும்*
தேவனுடையவர்கள் – எபி 2:12, 1கொரி 3:23
பெயர்
பலகையை மாத்திரம் கிறிஸ்துவின் சபை என்று போட்டுக்கொண்டு கிறிஸ்துவின் சட்டத்தை
கடைபிடிக்காதவர்களுக்கும்,
சொந்தமாக சபையை நிறுவி (Founders) பலவிதமான
சபை பெயர்களை போட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும் இது *பொருந்தாது* !!
புதிய ஏற்பாட்டு சபையில் பின்பற்ற வேண்டிய சட்டங்களை அல்லாத
வேறு சட்டங்களை (உதா) தசம பாகம், குழந்தை ஞானஸ்நானம், மாவட்டத்திற்கு
ஒரு பிஷப், அங்கி போட்டுக்கொள்ளுதல், கிறிஸ்துமஸ்
என்றும் ஈஸ்டர் என்றும் பலவிதமான பண்டிகைகளை கொண்டாடுதல், உபவாச
திருவிழா, ஆராதனை திருவிழா, அபிஷேக
திருவிழா, கருவிளை கொண்டு இசைத்து பாடுவது, மாதத்திற்கு ஒரு முறை கர்த்தருடைய பந்தி என்று சொல்லி அநுசரிப்பது இப்படி
ஏராளமான அவர்களின் சொந்த சட்டங்களை தாங்கள் உருவாக்கிய சபைக்கு தாங்களே தனி தனி சட்டம் வகுத்து
வைத்திருப்பதால் – அவர்களை இந்த புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் கோட்பாடின் கீழ் நாம் நிதானிக்க
முடியாது.
காலம் கடந்து செல்ல செல்ல – வேதத்தை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தேவனுக்கு
கீழ்படிய வேண்டும் என்ற பயம் ஏற்படும் போது – நிச்சயம் அவர்களும் இப்படிப்பட்ட சொந்தமாக
உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு விலகி சத்தியத்திற்கு திரும்புவார்கள்.
இந்த
பதில்களை படிப்பவர்களுக்கு அதிகம் உதவியாய் இருக்கும் படி கேள்வி கேட்ட உங்களுக்கு
என் பாராட்டுக்கள் !!
என்
சொந்த கருத்துக்கள் அல்ல – காலாவதியான வசனங்களையும் அல்ல – நடைமுறையில் இருக்கும்
சகல ஆதார வசனங்களைக் கொண்டு பதில் எழுதியிருக்கிறேன் – பொறுமையாய் வாசித்து
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக