#59 *கேள்வி* அப். 20:7ன்படி அப்பம் பிட்கும்படி கூடி வந்தார்கள் என்று தானே
போடப்பட்டிருக்கிறது? திராட்சை ரசத்தையும் ஏன் கொடுக்கிறார்கள்?
*பதில்*
யோசிக்க
வேண்டிய கேள்வி !!
ஆங்கிலத்தில்
உள்ளது போல பெரிய எழுத்துகளோ (Capital) அல்லது புள்ளி இடைவெளி என்று எந்த முறையும் பின்பற்றாத காலத்தில் தான்
கிரேக்க பாஷையில், ஆதியிலே புதிய ஏற்பாட்டு நிருபங்கள்
எழுதப்பட்டிருந்தது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்பம்
பிட்கும்படி என்ற இந்த வசனத்தில் வரும் வார்த்தை பதத்திற்கு – கிரேக்க பாஷையின்
விளக்கத்தை அகராதியிலிருந்து கீழே கொடுத்திருக்கிறேன்.
to
break - κλάσαι (klasai) Verb -
Aorist Infinitive Active - To break (in pieces), break
bread.
Bread
- ἄρτον (arton) Noun -
Accusative Masculine Singular - Bread, a loaf, food.
அதாவது
– அப்பம் என்று வரும் இடத்தில் ஆகாரம் என்றும் வருவதையும் கவனிக்கவேண்டும்.
உதாரணத்திற்கு : சாப்பிட்டு போகலாம்
என்று ஒருவரை நீங்கள் வீட்டிற்கு அழைத்தால்,
அவர் குடிக்க தண்ணீரும் நீங்கள் கொடுக்க வேண்டியது அடங்கும்.
அப்பம்
பிட்கும்படி மாத்திரம்
கூடி வந்தார்கள் என்ற *சொல்படியே* நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும்
பட்சத்தில் – அப்பம் *பிட்க தான்* கூடி
வந்தார்கள் – அப்பத்தை *சாப்பிடுங்கள் என்று சொல்லவில்லையே* என்று நமக்கு அடுத்த
கேள்வி வருமே?
அப்.
2:42ல்
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்,
*அப்பம் பிட்குதலிலும்*, ஜெபம்பண்ணுதலிலும்
உறுதியாய்த் தரித்திருந்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம் –
அப்பம்
பிட்குதல் என்று சொல்லும் போது – எந்த அப்பத்தை இது குறிக்கிறது?
அப்பம்
பிட்குதல் என்று வரும் சொற்றொடரானது ஒரு உரையின் உருவமாயிருக்கிறது, முழு பதத்தை
வெளிபடுத்தும் ஒரு வார்ததை அது. கர்த்தருடைய மேஜை(1கொரி. 10:21),
கர்த்தருடைய பந்தி, ஐக்கிய பந்தி(1கொரி. 10:16), இராப்போஜனம்(1கொரி. 11:20), அப்பம் பிட்குதல் (அப். 20:7) என்கிற வார்த்தைக்கு – கர்த்தராகிய ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறும்படி அவர் நமக்கு கட்டளையாய் சொன்ன -
அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் – இரண்டிலும் பங்கெடுப்பது கிறிஸ்தவர்களுக்கு
கொடுக்கப்பட்ட கட்டளை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக