புதன், 2 மே, 2018

Is there Only one Church?

Kadawul oru sabai endru solli irukka... ulagathil aen ithanai sabaigal? Apo jesus iruntha sabai? Adam eve thidakkam inru varai ore sabai ethu?( kattayam sabaigal irukka mudiyathu)


Dear Brother,  நீங்கள் கேட்ட கேள்விக்காக நன்றி.
என்னுடைய பதில் கீழே :

1- Kadawul oru sabai endru solli irukka... ulagathil aen ithanai sabaigal? 
கிறிஸ்து ஸ்தாபித்தது தன்னுடைய சபையை (மத் 16:18)
அந்த சபைக்கு அவரே தலை (எபே 5:23, 1:22-23)

கிறிஸ்துவை தலையாய் கொண்டிராத எந்த சபையும் - வேதத்திற்கு புறம்பானதே !!

அவரவர் தங்கள் தங்கள் கொள்கைகளை வகுத்து கொண்டு ஒரு சபையை நிறுவிக்கொள்வதால் ஏற்பட்ட விளைவு தான் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நாம் பார்த்துக்கொண்டிருக்கும் பிரிவுகள் !!

கத்தோலிக்கரை கண்டால் csiக்கு பிடிக்காது.. இவரை கண்டால் Lutheranக்கு  பிடிக்காது.. இந்த மூவரை கண்டால் pentecostalக்கு பிடிக்காது.. இவர் எல்லோரையும் கண்டால் Full gospelக்கு பிடிக்காது !!  ஆனால்.. வேதத்தை அனைவருமே புரட்டி போட்டு விட்டதை உணர்ந்தாலும் வெளியே வர அவர்கள் கவுரவமும், பாரம்பரியமும் இடம் கொடுப்பதில்லை.

கிறிஸ்து ஸ்தாபித்த சபையில் நாமெல்லோரும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். மனிதன் உருவாக்கிய சபையில் அல்ல (எபே 4:12, 1:23). இன்று நீங்கள் காணும் ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு மனிதன் நிறுவனர் !!

2- Apo jesus iruntha sabai?
மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்தின் அடிப்படையில், யூதர்கள் பிதாவாகிய தேவனை வழிபட்டார்கள். அவர்களுக்கு ஜெப ஆலயங்களும், தேவ ஆலயமும் இருந்தது. இயேசு கிறிஸ்து அங்கு சென்று யூதர்களுக்கு புதிய நியமனத்தின் காலத்தை குறித்து பிரசங்கித்தார். (எரே 31:31-33)

3- Adam eve thodakkam inru varai ore sabai ethu?( kattayam sabaigal irukka mudiyathu)
இரண்டு காலங்களாக நாம் பார்க்க வேண்டும்.
கிறிஸ்துவிற்கு முன்.. கிறிஸ்துவிற்கு பின்.
இதற்கான பதில் - மேலே உள்ளது (#2)

நன்றி.

Eddy Joel, M.Th., Ph.D
Preacher
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக