#1111 - *வீடு கட்டும் போது கன்னி மூலை என்று சொல்கிறார்கள் இதற்கு வேதத்தில் ஆதாரம் உண்டா பாத்ரூம் அந்த இடத்தில் கட்டக்கூடாதா*?
*பதில்* : வாஸ்து முறையில் கன்னி மூலை என்பது இந்துக்களின் வீட்டு மனை சாஸ்திரத்தில் உள்ளது.
ஈசானி மூலை, வாயு மூலை என்பதெல்லாம் இந்துக்களின் தெய்வங்களை அடிப்படையாக அவர்கள் தங்கள் சாஸ்திரப்படி எழுதியது.
இந்துக்கள் தங்கள் வீட்டைக் கட்டும் போது, வடகிழக்கு பக்கம் தலை இருக்கவேண்டும் என்ற அவர்களது கோட்பாடு படி வீட்டை அமைத்துக் கொள்வார்கள்.
கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2கொரி. 6:16
நீங்கள் பாத்ரூம் கட்டுவதாக இருந்தால், அது உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு பிரச்சனையில்லாமல் கட்டினால் போதுமானது.
பாத்ரூமைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறதென்று நீங்கள் கேட்டால்,
வீட்டை எங்கு கட்டவேண்டும் என்ற ஒரு குறிப்பு புதிய ஏற்பாட்டிலும் (மத்.7:24); பாத்ரூமை வீட்டிற்குள் கட்டவே கூடாதென்ற ஒரு குறிப்பு பாளையத்தில் இருந்த இஸ்ரவேலருக்கு கட்டளையாகவும் கொடுக்கப்பட்டிருந்தது !! உபா. 23:12
இரகசியமாக வீட்டுமனை சாஸ்திரத்தை பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞராகிவிட வாய்ப்புள்ளது. கவனம். பிலி. 3:18, யாக். 4:4
இந்து சாஸ்திரத்தின்படியான வீட்டுமனைசாஸ்திர விளக்கப்படத்தை கீழே பார்க்கவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக