ஞாயிறு, 13 மே, 2018

Daily Dose 10-5-18


சகல ஜனங்களையும் நேசிக்கும் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவின் முதலாவது வருகையின் நோக்கம் *தன்னுடைய* ஜனத்தின் இரட்சிப்பு. தன்னுடைய நேரத்தை யூதரல்லாத புறஜாதிகளுக்கு ஒதுக்கவில்லை.

1-              ஒரு யூதரல்லாத ஸ்திரீ அவரிடத்தில் சுகம் வேண்டும் என்று வந்த போது: அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் (Mat 15:26)

தன்னுடைய சீஷர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்று சொன்னார் (மத் 10:5-7)

2-              அவர்கள் தங்களுக்கு தேவையானதை எடுத்துப்போகவும் வேண்டாம் என்றார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம் என்றார். (Luke 9:3-4)

நாம் *சோம்பல்* ஊழியர்களாய் இந்த வசன பகுதியோடு இருந்துவிடாமல் மேற்கொண்டு படிக்கும் போது, அவர் தன்னுடைய ராஜ்ஜியத்தையும் தன் பிதாவின் நோக்கத்தையும் *வெளிப்படுத்தினதை கவனிக்க வேண்டும்*.

1-              பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் *உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும்* சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார்.(மாற்கு 16:15)
2-              ஊழியத்திற்கு போகும் போது தனக்கு தேவையானதை தானே கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்.. *இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்*; ... (லூக் 22:36) என்று சொன்னார்.

*புறஜாதியான நம்மை* தேவன் தெரிந்தெடுத்திருக்கிறார். காலம் வெகு குறைவு என்பதை உணர்ந்து சுவிசேஷத்தை அனைவருக்கும் அறிவுறுத்துவோம்.  (அப் 15:14, 22:21)
*வேலை நம்முடையது..செயல் அவருடையது*.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Lord Jesus Christ, who loves every one.

Christ’s initial aim was to save His own people. His time was not preferred to Gentiles initially.

1.  When a gentile lady came to Him for healing, He said, "It is not right to take the children's bread and throw it to the dogs." (Mt 15:26)

He had instructed His disciples while sending them to field ministry that "Don't turn off into the road that leads to the gentiles, and don't enter a town of the Samaritans. Go, instead, to the lost sheep of the nation of Israel. As you go, proclaim, 'The kingdom of heaven is near!' (Mt 10:5-7)

2.  He also instructed not to carry their daily requirement along with them while going for Ministry work.

–> Lk 9:3 He told them, "Don't take anything along on the trip-no walking stick, traveling bag, bread, money, or even an extra shirt.


DO NOT BE LAZY at this point, read further about *Jesus’ Christ mission and the Will of God declared for the entire nation*.

1.    Mar 16:15  Then he said to them, "As you go *into all the world*, proclaim the gospel to the whole creation.

2.    Luk 22:36  Then he said to them, "But now the one who has a wallet must take it along, and his traveling bag, too. And the one who has no sword must sell his coat and buy one.

God has also chosen every Gentile like us. Let us understand the great mission and proclaim the Gospel to everyone. (Acts 15:14, 22:21)

The work is ours
Action is HIS part !!

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   0091 8144 77 6229
Preacher
Kaniyakulam Church of Christ
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக