#300 - *ஆவிக்குரியவர்கள் வெள்ளை நிற ஆடைதான் அவசியம்
அணிய வேண்டுமா?*
*பதில்* :
*வெள்ளை நிறம்* – ஒப்பனையாக நீதியை /
பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறது. (வெளி. 7:13-14)
வெளிபடுத்தல் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட வெள்ளை ஆடை
அணிந்தவர்கள் *இரத்தத்தில்* (சிவப்பு) தோய்த்து – *வெளுத்தவர்கள்* (வெள்ளை)
!!
சிலுவை எடுத்து கொண்டு இயேசு வர சொன்னதும் - தங்கத்திலும் வெள்ளியிலும் மரத்திலும் தங்கள்
வசதிக்கேற்ப சிலுவையை சுமந்து வர ஆரம்பித்தார்கள் இந்த பெயர் கிறிஸ்தவர்கள் – தான்
கெட்டதுமல்லாமல் மற்றவரையும் அழிவிற்கு நேராய் நடத்துபவர்கள் – வசனத்தை
புரியாதவர்கள் / அல்லது சொந்த வயிற்றை நிரப்புவதற்கு ஆதாயம் தேடுபவர்கள். (பிலி. 3:18-19)
தேவன் முகத்தையோ, வெளி தோற்றத்தையோ பார்ப்பவர் அல்ல – இருதயத்தை
பார்க்கிறார். (1சாமு. 16:7)
கருப்பு சட்டை அணிந்தால் துக்கம் என்று சொல்கிறவர்கள் விசேஷத்தின்
போது கருப்பு கோட் அணிந்து கொள்வார்கள் !!
எந்த நிற ஆடையையும் அணிவதற்கு வேதத்தில் தடை இல்லை – ஆடை தகுதியானவையாக
இருப்பதே அவசியம் (1தீமோ. 2:10)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
#341
பதிலளிநீக்கு*கேள்வி*
உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக - பிரசங்கி 9 : 8
#300ன் கேள்விக்கான உங்கள் பதிலையும் – மேலே உள்ள வசனத்தையும் ஒப்பிடவும்.
*பதில்* :
வெள்ளை என்பது எல்லா இடங்களிலும் - நிறத்தை மாத்திரமே அல்ல மாறாக அது சுத்தத்தை குறிக்கிறதாயிருக்கிறது.
ஆதாரமாக – வெளிபடுத்தல் புத்தகம் 7ம் அதிகாரத்தின் 13ம் வசனத்தில் .. மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: *வெள்ளை அங்கிகளைத்* தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
14ம் வசனம் - .... இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய *இரத்தத்திலே* தோய்த்து வெளுத்தவர்கள்.
இரத்தத்தில் தோய்த்த துணி – எவ்வாறு வெள்ளையாக இருக்கும்?
மேலும் – கிறிஸ்துவின் வருகையில் பூமியானது முழுவதும் அழிக்கப்பட்டிருக்க (2பேது 3:10) பரலோகத்தில் துணி எங்கே இருக்கும்?
ஆகவே வெள்ளை என்பது ஒரு ஒப்பனையான வார்த்தை.
புறம்பான வெள்ளையை அல்ல – வெள்ளையான அல்லது தூய்மையான இருதயத்தை தேவன் காண்கிறார் (மத் 23:27)
வேதாகமத்தை நாம் பொருள்பட படிக்கும் போது தான் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
*Eddy Joel*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com