புதன், 5 ஆகஸ்ட், 2026

#1245 – கர்த்தருடைய பந்தியின் வேளையில், அப்பம் மற்றும் திராட்ச ரசத்திற்கு தனித்தனியே ஜெபிப்பது அவசியமா அல்லது ஒரே ஜெபத்தில் நடத்தலாமா?

*#1245 – கர்த்தருடைய பந்தியின் வேளையில், அப்பம் மற்றும் திராட்ச ரசத்திற்கு தனித்தனியே ஜெபிப்பது அவசியமா அல்லது ஒரே ஜெபத்தில் நடத்தலாமா?* 
 
*பதில்* : எந்த செய்கைக்கும் நாம் வேதாகம உதாரணத்தையே முன் வைத்து அதை கைக்கொள்கிறோம்.. தேவனுடைய தொழுகையில் எந்த செயலையும் சுயமாய் முடிவு எடுத்து பின்பற்றுவது ஆபத்து.
 
கர்த்தருடைய வேளையின் பொழுது, வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை கீழே பதிவிடுகிறேன்:
 
*முதல் பதிவு:*
மத்தேயு 26:26 அவர்கள் போஜனம்பண்ணுகையில், 
1) இயேசு “அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து”, 
அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
 
மத்தேயு 26:27 
2) “பின்பு”, 
“பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”,
 அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
 
*இரண்டாம் பதிவு*:
மாற்கு 14:22 அவர்கள் போஜனம்பண்ணுகையில், 
1) இயேசு “அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து”, 
அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
 
மாற்கு 14:23 
2) “பின்பு”, 
“பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”, 
அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
 
*மூன்றாம் பதிவு:*
லூக்கா 22:19  பின்பு 
1) அவர் “அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
லூக்கா 22:20 
2) “போஜனம்பண்ணினபின்பு” 
அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
 
*நான்காம் பதிவு:*
1கொரி. 11:24 
1) ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
1கொரி. 11:25 
“போஜனம்பண்ணினபின்பு”, 
அவர் “அந்தப்படியே பாத்திரத்தையும்” எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
இப்படியாக நான்கு இடங்களிலும் தனித்தனியே செய்யப்பட்ட வகையை நான் ஏன் மீறவேண்டும்?
 
எப்படியாக
தொழுகையில்,
பாடல் பாடும்பொழுது இசைக்கருவி வாசிக்கப்படவில்லையோ, 
காணிக்கையின் போது பாடுவதில்லையோ,
அப்படியே இதையும் வசனத்தின்படி செய்வது நமக்கு வாக்குவாதமின்றி ஏற்கத்தக்கது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக