*சரித்திரத்தை பின்பற்ற கற்பனை ஏன்?*
by : Eddy Joel Silsbee
நம்மை பாவத்திலிருந்து மீட்டு எடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கடவுள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யார் கடவுள் என்று இக்காலங்களில் பலருக்கு கேள்வி எழும்புகிறது.
மனிதனால் *உருவாக்கப்பட்டவரோ கற்பனையாலும், காவியத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுளோ அல்ல* அவர்.
அவர் உலகத்தை உண்டாக்கியவர், யோ. 1:3
ஆதி முதல் இருக்கிறவர், யோ. 1:2
மனுஷனை மனுஷனுடைய பார்வையிலேயே,
அவன் சூழ்நிலையில் இருந்து,
எவரும் பாவம் செய்யாமல் வாழ முடியும் என்று நிரூபித்து, எபி. 7:26
வருடந்தோரும் பாவ மன்னிப்பிற்கென்று பலி செலுத்தும் முறையை நிறுத்தி, எபி. 9:25-10:10
உலகத்தின் எல்லா ஜனங்களுக்கும் ஒரே ஜீவ பலியாய் தன்னையே தன் பிதாவிற்கு ஒப்புக்கொடுக்க உலகத்தின் இரட்சகராக பூமியில் அனுப்பப்பட்டு பிறந்தார். 1யோ. 2:2, யோ. 3:17
ஏழையின் உருவை எடுத்து வந்தவர். யோ. 7:41, மாற்கு 6:3
திக்கற்றவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும், தேடி வந்தவர். யோ. 14:18, மத். 18:20, லூக். 7:12-13, மத். 9:11, மாற்கு 2:16, லூக். 5:30
தவறு செய்தால் கண்ணை குத்துவதோ,
நாக்கை பிடுங்குவதோ,
பல்லை உடைப்பதோ இல்லாமல்,
தன் தவறை உணர்ந்து மனந்திரும்பியவர்களுக்கு மன்னிப்பை கொடுத்து தண்டனையிலிருந்து மீட்க வந்தவர். லூக். 5:32, எபி. 2:1-4
எந்த வகை கொடிய பாவம் செய்தவர்களையும்,
அவர்கள் தன் தவறை உணரும்பட்சத்தில்,
தன் வார்த்தைக்கு கீழ்படியும் போது,
அவர்களை பரிசுத்தப்படுத்தி,
பரலோகத்திற்கு கொண்டு செல்கிறவர். அப். 2:38, 22:16
பொது ஜனங்களுடன் குடிமதிப்பில் கூட சேர்க்கப்படாமல் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட சமுதாயமாக இருந்த மேய்ப்பவர்களும் பரலோக இராஜ்யத்தில் அவசியமானவர்கள் என்பதால், இயேசுவானவர் இவ்வுலகத்தில் பிறந்த அந்தக்ஷனமே, வானதூதர்கள் மூலமாக முதல் தகவலை அவர்களுக்கு அனுப்பி விட்டவர். லூக்கா 2:8-14
டிசம்பர் 25ந் தேதி பிறந்தார் என்று எந்த பதிவும் வேதாகமத்தில் இல்லை. ஆகவே, கற்பனையாக பிணைக்கப்பட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மைக்கு செவிசாய்ப்போம்.
வீட்டின் முன்பு நட்சத்திரம் தொங்குவது முக்கியமல்ல.
இருதயத்திலே இயேசு பிறக்க வேண்டும்.
அப்போது தான் சுய வாழ்வில் நட்சத்திரமாக ஜொலிப்பார்.
வேதாகமம் ஒரு காவியமோ, கதையோ, கற்பனையோ, சுயமாக ஓரிரு நபரால் எழுதப்பட்ட கவிதையோ அல்ல..
அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் பல காலங்களாக பல நபர்கள் மூலமாக எழுதிவைத்ததாலேயே முரண்பாடற்று காணப்படுவதை *வேதாகமம் என்று சொல்லாமல் ”பரிசுத்த வேதாகமம்” எனப்படுகிறது*. 2தீமோ. 3:16, 2பேதுரு 1:20-21, எபி. 4:12, 2சாமு. 23:2
தடயங்களை தேடி தேடி இன்றும் கிடைக்காமல், நீதிமன்றங்களையும் அரசாங்கத்தையும் ஆட்சியையும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து கற்பனை கதைகளை சரித்திரமாக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லாதபடிக்கு; பிறந்த தேதி வேதத்தில் குறிப்பிடவில்லையென்றாலும் *இயேசுவானவர் இவ்வுலகில் பிறந்தது எவராலும் அழிக்க முடியாத மறுக்க முடியாத சரித்திரம்* !!
உங்கள் தவறான கணக்கை வைத்துக்கொண்டு ஏப்ரல் மாதம் பிறந்த ஒருவருக்கு டிசம்பர் மாதத்தில் Happy Birthday சொன்னால் ஏற்பாரோ?
Rightல சிக்னலை போட்டு Leftல் போகும் பழக்கத்தை பரலோக பிராயணத்தில் காண்பித்தால் மெய்யாகவே சரியான கதவு என்று நீங்கள் நினைத்தாலும் மோசமான வாழ்வே பாழாகும் கதவினுள்ளே இயேசுவே அனுப்பி வைக்க நேரிடலாம் !! மத். 25:33, 34, 41, 2தெச. 1:7-8; 2:11-12
தனது *பிறந்த தினத்தையல்ல மரணத்தை நினைவுக்கூறச் சொன்னார் இயேசு கிறிஸ்து* !! 1கொரி. 11:26, லூக். 22:19
கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனை நாம் தொழுது கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வழிவகுத்தவரின் போதனைக்கு சரியாக கீழ்படிந்து நித்திய ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.. யோ. 14:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/ZYghRcLwC30
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக