#1246 - *கணவன் மனைவி உடலுறவில் ஈடூபடுவது பாவமா? இருவரில் ஒருவர் உபவாசித்தும் ஒருவர் உபவாசிக்காமலும் இருந்து, ஒருவர் உடலுறவில் ஈடுபட விரும்புவது பாவமா?*
*பதில்*: திருமணமான தம்பதியரின் உடலுறவு பாவம் அல்ல. திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, பாலியல் ஆசைக்கு ஒரு சரியான வடிகாலைக் கொடுப்பதாகும்.
விவாகமஞ்சம் என்ற தமிழ் வார்த்தை இங்கே “கொய்ட்டே” என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பு. அவ்வார்த்தை உடலுறவைக் குறிக்கும் ஒரு கிரேக்கச் சொல்லாகும். "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (எபி. 13:4).
திருமணத்திற்குள் உடலுறவு தூய்மையானது.
ஆனால் திருமணத்திற்கு வெளியே, அது திருமணத்திற்கு முன்பான (வேசித்தனம்) அல்லது திருமணத்தின் போது உங்கள் வாழ்க்கைத் துணை அல்லாத ஒருவருடன் (விபச்சாரம்) செய்வது பாவமாகும். பாவமான உடலுறவைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக பவுல் திருமணத்தை ஆதரித்தார்.
திருமணத்திற்கான ஒரு உந்துதலாக இக்காரணமும் இருப்பதால், திருமணத்தினுள் இணைந்துள்ள, உங்கள் வாழ்க்கைத் துணையைத் திருமணத்திற்குத் தூண்டிய அந்த விஷயத்தையே அவருக்கு மறுப்பது அபத்தமானதாகிறது.
“உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்." (நீதி. 5:15-21).
பாலுறவு என்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அவர்களின் பாலியல் ஆசையைத் தணிப்பதற்காக பிரத்தியேகமாக இருக்க வேண்டும். எனவே, பவுல் 1 கொரிந்தியர் 7-ல், கணவனுக்கோ மனைவிக்கோ தங்கள் சொந்த சரீரத்தின் மீது அதிகாரம் இல்லை என்று கூறினார். அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது, தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுத்தார்கள்.
தங்களுக்குள் ஒரு இடைவெளி தேவைப்படுகிறது என்று இருவரில் ஒருவர் யோசித்தால் அது பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கவேண்டியது. (1கொரி. 7:5)
திருமணமான ஒருவர் தனக்காக வாழாமல், எப்போதும் தன் வாழ்க்கைத் துணையின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கணவர்கள் தங்கள் மனைவிகளைக் கனப்படுத்த வேண்டும் என்றும் (1 பேதுரு 3:7), மனைவிகள் தங்கள் கணவர்களை மதிக்க வேண்டும் என்றும் (எபேசியர் 5:33) சொல்லப்பட்டிருக்கிறது.
கணவன் அல்லது மனைவியின் ஒரு அடிப்படை மனிதத் தேவை இது. சுயநலமாக இருவரில் எவரும் இருக்க வேதம் அனுமதிக்கவில்லை. பல சமயங்களில், தம்பதிளில் ஒருவர் தனது வேறு ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, உடலுறவை மறுப்பதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு தவறைப் பயன்படுத்தி மற்றொரு தவறைச் சரிசெய்ய முடியாது. ரோமர் 12:18-21
தம்பதியரில் ஒருவர் மற்றவருடன் இணங்காமல் இருக்கும் பொழுது மனம் வேதனையுடனும் தீய சிந்தையுடனும் நிறைந்திருக்க உங்களது ஜெபமும் தேவனிடத்தில் சேருவதற்கு தடையாகிறது. 1கொரி. 7:5
மேலும், கிறிஸ்தவத்தில் உபவாசம் என்பது போதனை அல்ல. உபவாசத்தை கொள்கையாக மார்க்க ரீதியாக கடைபிடிக்க கட்டளையிடுவதும் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதும் வேதத்திற்கு முரணானது.
அவரவர் விருப்பத்தின்படி அவரவர் தீர்மானிப்பதாகும்.
உபவாசம் இருக்கிறேன் என்று பழச்சாறும் பாலும் அல்லது ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு 3 நாள் உபவாசம், 7நான் உபவாசம், 40நாள் உபவாசம் என்று பறைசாற்றிக்கொள்வது தவறு. சரீர ஒடுக்கம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத். 6:17-18.
உபவாசத்தைக் குறித்த விரிவான தகவலுக்கு #906ஐ வாசிக்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக