*நிச்சயம் நினைத்தருளுவார்*.
by : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
பிள்ளைப்பேறு பாக்கியம் இல்லை என்றதும் துவண்டு விடுகிறோம்.
நான் *என்ன பாவம் பண்னிணேன்... எனக்கு ஏன் இப்படி*,
... நான் யாருக்கும் *எந்த துரோகமும் செய்யலியே*,...
என்று நினைத்து எப்போதும் வேதனை அடைகிறோம்.
இப்படியான வேதனையும் கஷ்டமும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று...
அப்படி ஒரு *சூழ்நிலையில் இருந்த போதும்கூட,*
சகரியாவும் எலிசபெத்தும் கர்த்தருடைய சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் *குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்*. (லூக். 1:6) **
இதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
அதேபோல, அன்னாள் என்னும் பெண்மணி, *வருஷந்தோறும்* (1 சாமு. 1:7) துக்கப்படுத்தப்பட்டும்; துவண்டுவிடாதபடி *தொடர்ந்து தேவனுடைய பாதத்தில் ஜெபித்துக்கொண்டே இருந்தாள்*. (1 சாமு. 1:10)
மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இருதயத்துடிப்பை (உயிர்) உருவாக்க முடியாது !!
அதை தேவன் தான் அனுக்கிரகம் செய்து *பரத்திலிருந்து* கொடுக்க வேண்டும். (சங்.127:3)
அன்னாளும் சரி, எலிசபெத்தும் சரி சுய முயற்சியின்படியோ, மருத்துவரை மாத்திரமே சார்ந்தோ அல்லாமல், *தேவனை இன்னும் அதிகமாய் தேடினார்கள், ஜெயம் பெற்றார்கள்*.
எந்த கடவுள் அவர்களுக்கு இறங்கினாரோ,
அதே தேவனையே நாமும் தொழுகிறோம்.
அவர் கட்டளைக்கு செவிசாய்த்து,
சுயத்தை ஆராய்ந்து,
அவருக்குப் பிரியமில்லாததை வாழ்க்கையிலிருந்துக் களைந்து,
சமர்பித்து,
தொடர்ந்து ஊக்கத்தோடு ஜெபிப்போம்.
*நிச்சயம் நினைத்தருளுவார்*.
அவருடைய வேளைக்கும், அவருடைய சித்தத்திற்கும் ஒப்புக்கொடுப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக