சனி, 2 மே, 2026

#987 - ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?

#987 - *ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?*

 

*பதில்* - தண்ணீரினாலும் ஆவியினாலும் ஒருவன் பிறவாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்றார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. யோ. 3:5

 

ஏன் தண்ணீரில் எடுக்க வேண்டும் என்று நான் அறிந்து வேதத்தில் நேரடியான பதில் இல்லை. 

 

ஆனால் மனிதனுக்கு தண்ணீரின் அத்தியாவசியத்தை கவனிக்கும் போது அதனை தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்றே நான் சொல்வேன்.

 

அமெரிக்க விஞ்ஞான ஆய்வகத்தின் கணக்கின் படி பூமியின் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரில் நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கும் தண்ணீரின் அளவில் 96.5 சதவீதம் சமுத்திரம் அடக்கியுள்ளதாம் !!! (1)

 

மனித சரீரம் 60 சதவீதம் தண்ணீர் நிறைந்தது. (2)

 

குறைவில்லாமல் எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும். நீராவியாகவும் மேகங்களாகவும் வாயுக்களாகவும் தடையில்லாமல் கிடைக்கிறது – யோபு 36:26-29

 

நிறைந்திருக்கும் தண்ணீர் எப்போதும் மகிழ்ச்சியை அல்லது புத்துணர்ச்சியை தருகிறது. யோபு 37:5-20

 

சரீர களைப்பு தண்ணீரில் களைகிறது. யோ 19:28, 2சாமு. 23:15

 

தேவனை தேடும் ஆத்துமாவின் ஏக்கமாக ஒப்பிடப்படுகிறது – சங். 63:1

 

நம் நீதியை தேவன் சரிக்கட்டும் மகிழ்ச்சி தண்ணீருக்கு ஒப்பிடப்படுகிறது ஏசா. 35:5-7

 

புற அழுக்கை சுத்தம் செய்கிறது – எண். 19:19-20, யாத். 30:18-20

 

உலகில் தண்ணீரின்றி எவரும் மரிப்பதில்லை. 

தண்ணீரை சென்றடைய முடியாமல் மரிக்கிறவர்கள் உண்டு. 

 

அது போல மனிதன் இரட்சிக்கப்படும்படி ஆவியானவர் ஏற்படுத்தின உடன்படிக்கையானது எந்த இடத்திலும் உண்டு.  அதை சென்றடைய முடியாமல் நித்திய ஜீவனை இழக்கிறவர்கள் அநேகர். ரோ. 1:20

 

அப்படியாக - எந்த இடத்திலும், எப்போதும், எங்கும், எப்படியும் தண்ணீர் கிடைப்பதால் – கிறிஸ்துவிற்குள்ளாக இரட்சிப்பின் படியில் அடியெடுத்து வைக்கும் ஒருவர் ஞானஸ்நானத்தை தண்ணீரில் எடுக்கும்படியாக சம்பந்தப்படுத்தியிருக்கலாம். அதன் நோக்கத்தை தேவனே அறிவார் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +918144776229

    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2


*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com


-------------------------

 

ஆதாரம் : 

(1) https://www.usgs.gov/special-topic/water-science-school/science/how-much-water-there-earth 

 

(2) https://www.usgs.gov/special-topic/water-science-school/science/water-you-water-and-human-body?qt-science_center_objects=0#qt-science_center_objects 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக