சனி, 2 மே, 2026

#409 - கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…

 #409 - *கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது  என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்*…

 

*பதில்* : இந்த கேள்விக்கு நேரடியான பதிலை அப்.யோவான் தன் நிருபத்தில் எழுதுகிறார். 

 

*அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு* அவருக்குமுன்பாகப் *பிரியமானவைகளைச்* செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 1யோ. 3:22

 

கிறிஸ்துவினுடைய கட்டளைகளை நான் கைகொண்டு நடப்பதே பிரதானமாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

 

*அது என்ன முக்கியாமான கட்டளை?*

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1யோ. 3:23

 

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். யோ. 9:31

 

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, *நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும்* சீர்பொருந்தினவர்களாக்குவாராக- எபி. 13:21

 

அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து சகல நற்கிரியைகளில் வளர்ந்து அவரில் பெலப்படவேண்டும் என்பதே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

 

அடிப்படை / துவக்கம் – இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பது. (அப்.. 8:37). [இயேசு தான் பிதா / இயேசு தான் ஆவியானவர் / எல்லாரும் ஒன்னு தான் என்று குழப்புகிறவரிடத்திலிருந்து வேதத்தின் மூலம் தெளிவுபடுங்கள்.]

 

பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் (முழுகி) பெற்றுக்கொள்ளுங்கள் (அப். 22:16, 2:38)

 

ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ளுங்கள் (அப். 20:7)

 

ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் வேதத்தின் படி பாடல் பாடி வசனத்தை கேட்டு காணிக்கையை அந்த அந்த சபை வளர்ச்சிக்காக பகிர்ந்து கொடுத்து இப்படி கர்த்தருடைய கட்டளையை நிறைவேற்றுங்கள் (1கொரி. 16:1-2, கொலோ. 3:16)

 

பூரணமான அன்பு வளர்ந்தால் – ஆவியின் கனிகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் (கலா. 5:22-23)

 

தேவன் எப்போதும் நம்மீது பிரியப்படுவார் (1யோ. 3:22)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +918144776229

    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2


*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com


-------------------------


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக