வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

#1238 – பிரசங்கத்தில் உதாரணங்களை பயன்படுத்தலாமா?

 #1238 – *பிரசங்கத்தில் உதாரணங்களை பயன்படுத்தலாமா?* ஆண்டவர் பரலோக ராஜ்யத்தின் உண்மைகளை உவமைகளை கொண்டு கூறினார். பிறகு அப்போஸ்தலர்கள் உவமைகளை பயன்படுத்தவில்லை. இக்காலங்களில்,  சுய கற்பனையில், மனுஷ கற்பனையில் உவமைகளை போதிக்கிறார்கள். ஆண்டவர் கூறிய பைபிளில் உள்ள உவமைகளை கூறலாமே. நமது கற்பனையில் கூறினால் தவறு தானே. வேத வாக்கியங்களின்படி தானே போதிக்க வேண்டும். மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாக போதிக்கக் கூடாது என்று  மத்தேயு 15:9 வேதம் கூறுகிறது தானே.

*பதில்* : கற்பனைகளை உபதேசங்களாய் போதிப்பது தவறு

அவசியப்படும் பொழுது உதாரணங்களை சத்தியத்தோடு ஒப்பிட்டு “*சத்தியத்தையே*” வலியுறுத்த வேண்டும்.

மத்தேயு 15:9ல் சொல்லப்படுவது – தங்கள் சொந்த கருத்துக்களையே உபதேசங்களாய் போதிப்பதை கண்டிக்கிறது. உதாரணங்களை அல்ல. எ.கா. கொர்பான் (மத். 15: 4–6, மாற்கு 7:11), வாயால் மதித்து, இதயத்தில் தூரமாக இருப்பது (மத். 15:8) போன்றவை.

மேலும், அப்போஸ்தலர்கள் தங்கள் போதனையில் “*உதாரணங்களை பயன்படுத்தினார்கள்*”!! 
பயன்படுத்தவில்லை என்று சொல்வதற்கில்லை. அதன் பட்டியலை கீழே தருதிறேன்.
ஆகவே, பிரசங்கம் செய்வது மாத்திரம் முக்கியமல்ல, சத்தியத்தை கேட்பவர்கள் அதை புரிந்துக்கொள்ளும் வகையில் பிரசங்கிப்பது அவசியம். உதாரணங்கள் அவசியப்படுமெனில் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

“*அப்போஸ்தலர்கள் தங்கள் போதனையில் பயன்படுத்திய பட்டியல் இதோ*:”

*அப்போஸ்தலர் பவுல்* 
*1- தம்மையே உதாரணமாக காட்டுதல்*
1 கொரிந்தியர் 11:1 – “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்.”
பிலிப்பியர் 3:17 – “எங்களை மாதிரியாகக் கொண்டு நடக்கிறவர்களை கவனியுங்கள்.”

2- *விளையாட்டு ஓட்டப்பந்தய உதாரணம்*
1 கொரிந்தியர் 9:24–27 - கிறிஸ்தவ வாழ்க்கையை ஓட்டப்பந்தயத்துடன் ஒப்பிடுகிறார்.
“பரிசை பெறும் வகையில் ஓடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

3- *விதைத்தலும் அறுவடை செய்தலும்* (விவசாய உதாரணம்)
கலாத்தியர் 6:7–9 -  “மனுஷன் விதைத்ததைத் தான் அறுப்பான்.”

*அப்போஸ்தலர் பேதுரு*
4- *வரலாற்று சம்பவங்களை உதாரணமாக பயன்படுத்துதல்*
2 பேதுரு 2:4–8 - நோவாவின் காலத்திலான பெருக்கெடுத்த வெள்ளம் சோதோம், கொமோரா நகரங்கள்

*யாக்கோபு* (வாக்கியத்தின்படி)
5- *நாக்கின் சக்தி பற்றிய உதாரணங்கள்*
யாக்கோபு 3:3–6 -  குதிரையின் கடிவாளம், கப்பலின் சுக்கான், சிறிய தீப்பொறி

*அப்போஸ்தலர் யோவான்*
6- *உலக ஆசைகள் x தேவனது சித்தம்*
1 யோவான் 2:15–17 - உலகத்தின் ஆசைகள் தற்காலிகம் x தேவனுடைய சித்தம் நித்தியமானது

“*அப்போஸ்தலர்கள் பயன்படுத்திய உதாரணங்களின் வகைகள்*:”
தங்கள் வாழ்க்கை
விளையாட்டு ஒப்பீடுகள்
விவசாயம்
வரலாற்று நிகழ்வுகள்
இயற்கை மற்றும் அன்றாட வாழ்க்கை
ஒப்பீடு மற்றும் எதிர்மறை-நன்மை விளக்கம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : 

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக