செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

#1237 – மாம்ச கிரியைகள் என கலாத்தியர் 5:19 -ல் வரும் ஒவ்வொன்றையும் விளக்கமாக பதிவிட முடியுமா?

 *#1237 – மாம்ச கிரியைகள் என கலாத்தியர் 5:19 -ல் வரும் ஒவ்வொன்றையும் விளக்கமாக பதிவிட முடியுமா? முக்கியமாக விபச்சாரம் மற்றும் வேசித்தனம்*.
 
*பதில் :* 

*1) விபசாரம் (Adultery)*
திருமண உடன்படிக்கைக்கு விரோதமான பாலியல் பாவம்.
தேவன் தெளிவாகத் தடை செய்த கட்டளை இது. யாத். 20:14, எபி. 13:4, மத். 5:27–28
 
கிறிஸ்தவன் (கிறிஸ்துவே மணவாளன்) என்று தன்னை அழைத்துக்கொள்பவர் எவரும் "கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரம்" உட்படாமல், மற்ற நிறுவனர்களின் கிறிஸ்தவத்திற்கு அல்லாத  கட்டளைக்கு உட்படுபவர்களை வேதம் விபச்சாரக்காரர் என பட்டியலிடுகிறது.
 
அதாவது திருமணம் செய்துக்கொண்ட கணவனது கட்டளைக்கு மாத்திரம் உட்படாமல் மற்ற ஆண்களின் கட்டளைப்படி நடந்தால் எந்த கணவன் தனது மனைவியை ஏற்றுக்கொள்வான்? 
 
சபை என்ற பெயரில் தாங்களே தோற்றுவித்துக்கொண்டு கிறிஸ்தவத்தில் சொல்லப்படாத சகல கிரியைகளையும் ஆராதனை என்ற பெயரில் சகல அவலங்களை ஆவியானவர் சொன்னார், வெளிப்படுத்தினார் என்று தேவனுடைய பெயரையே பயன்படுத்தி அரங்கேறிக்கொண்டிருக்கும் அத்தனை மக்களும் இதை ஒப்பிட்டு பார்த்து, அப்படிப்பட்ட தீங்கான தவறான செய்கைகளிலிருந்து விடுபட்டு, சத்தியத்தை முறையாய் கேட்டு கீழ்படிந்து இரட்சிக்கப்பட்டு கிறிஸ்து ஸ்தாபித்த சபையில் நிலைத்து நிற்கவேண்டும். மற்ற அனைத்து மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவப்பட்ட சபை என்பதை நினைவில் கொள்க! அவர்களே அதன் நிறுவனர் யார் எனவும் எழுதி வைத்தும் உள்ளதால் – அதன் உறுப்பினர்கள் தங்கள் கண்களை விரிவாய்த் திறந்து கவனித்து சத்தியத்திற்குள் வரவேண்டும். 
 
*2) வேசித்தனம் (Fornication / பாலியல் அசுத்தம்)*
திருமணத்திற்கு வெளியான எல்லா பாலியல் பாவங்களுமாகும். 
 
விசுவாசிகள் பரிசுத்தத்திற்கென அழைக்கப்பட்டவர்கள்.
 
1 கொரி. 6:18–20, 1தெச. 4:3–4, எபே. 5:3
 
*3) அசுத்தம் (Impurity)*
எண்ணம், வார்த்தை, செயலில் ஒழுக்கக்கேடு.
தேவன் உள்ளமும் வாழ்க்கையும் சுத்தமாயிருக்க விரும்புகிறார்.
2 கொரி. 7:1, கொலோ. 3:5
 
*4) காமவிகாரம் (Lasciviousness / காம வெறி)*
கட்டுப்பாடில்லாத காம ஆசை; வெட்கமில்லாத ஒழுக்கக்கேடு.
மனம் கடினமாவது இதன் விளைவு.
ரோ. 1:24–27, 1பேதுரு 4:3
 
*5) விக்கிரகாராதனை (Idolatry)*
தேவனைவிட வேறெதையும் உயர்த்திப் போற்றுதல்.
சிலை/படம் போன்ற விக்கிரகத்தை வணங்குவது. 
இறந்து போன அப்பா, அம்மா, பிள்ளை, தாத்தா, பாட்டி, இயேசு என்ற படம், மரியாள் என்ற படம் இப்படி அத்தனையும் இதில் அடங்கும்.
பேராசையும் விக்கிரகாராதனையாக கருதப்படுகிறது.
யாத். 20:3–5, 1கொரி. 10:14, கொலோ. 3:5
 
*6) பில்லிசூனியம் (Witchcraft / சூனியம்)*
மந்திரம், ஜாதகம், தீய ஆவிகளின் உதவி நாடுதல்.
தேவன் கடுமையாகக் கண்டிக்கிறார்.
உபா. 18:10–12, அப். 19:19, வெளி. 21:8
 
*7) பகைகள் (Hatred)*
பிறரை எதிரியாகக் கருதும் விரோத மனப்பான்மை.
அன்பில்லாதவன் தேவனை அறியான்.
1யோ. 4:20, மத். 5:44
 
*8) விரோதங்கள் (Strife / சச்சரவுகள்)*
எப்போதும் சண்டை, வாதம் செய்யும் மனநிலை.
மேலிருந்து வரும் ஞானம் சமாதானமானது.
நீதி. 20:3, யாக். 3:16
 
*9) வைராக்கியங்கள் (Jealousy)*
பிறரின் ஆசீர்வாதத்தைப் பார்த்து பொறாமை கொள்ளுதல்.
இது கலக்கத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும்.
நீதி. 14:30, யாக். 3:14–16
 
*10) கோபங்கள் (Wrath)*
வெடிக்கும் கோபம்; சுய கட்டுப்பாடு இல்லாத மனநிலை.
மனிதக் கோபம் தேவனுடைய நீதியை உண்டாக்காது.
யாக். 1:20, எபே. 4:31
 
*11) சண்டைகள் (Selfish ambition)*
சுயநலத்தால் உருவாகும் போட்டி மனப்பான்மை.
தாழ்மையுடன் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.
பிலி. 2:3, யாக். 3:16
 
*12) பிரிவினைகள் (Dissensions)*
சபையில் பிளவு ஏற்படுத்துதல்.
ஐக்கியத்தை காக்க வேண்டும்.
1கொரி. 1:10, நீதி. 6:16–19
 
*13) மார்க்கபேதங்கள் (Heresies / தவறான போதனைகள்)*
சத்தியத்திற்கு விரோதமான போதனை.
சுத்தமான போதனையைப் பற்றிக் காத்துக்கொள்ள வேண்டும்.
2பேதுரு 2:1, தீத்து 3:10
 
*14) பொறாமைகள் (Envyings)*
பிறருடைய நன்மையைப் பார்த்து மனக்கசப்பு.
பாவப்பட்ட மனநிலையாகக் கருதப்படுகிறது.
ரோ. 1:29, 1பேதுரு 2:1, 
 
*15) கொலைகள் (Murders)*
கட்டளையிடப்படாத
நிர்பராத (innocent) மனித உயிரைக் கொல்லுதல்.
இதுவும் இருதயத்தில் தொடங்குகிறது.
யாத். 20:13, 1யோ. 3:15
 
*16) வெறிகள் (Drunkenness)*
மதுவினால் கட்டுப்பாடு இழத்தல்.
பரிசுத்த ஆவியினால் நிரம்பும்படி அழைப்பு.
எபே. 5:18, நீதி. 20:1
 
*17) களியாட்டுகள் (Revelings)*
ஒழுக்கக்கேடு நிறைந்த விருந்து, மதுபோதைக் கொண்டாட்டங்கள்.
வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடக்க வேண்டும்.
ரோ. 13:13, 1பேதுரு 4:3
 
இப்படிப்பட்டவற்றைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டார்கள்.
 
வாழ்வியல் முறை இப்படியாக நிரம்பியிருந்தால், அது ஆன்மீக மாற்றமின்மையை காட்டுகிறது.
1கொரி. 6:9–10, வெளி. 22:15, கலா. 6:7–8

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :

Q&A Book ஆர்டர் செய்ய :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக