*#1231 - குழந்தைகள் கண்களுக்கு
தேவன் தெரிகிறாரா? அவர்கள் தனியே சிரிப்பது தேவன் சிரிக்க வைக்கிறாரா?*
பதில் : “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்” (சங். 127:3) என்று வேதாகமம் கூறுகிறது. அதனால், குழந்தைகள் தூக்கத்தில் அல்லது தனியே சிரிக்கும் போது, “தேவன் அவர்களை சிரிக்க வைக்கிறார்” என்று சிலர் கூறுவதை நாமும் கேட்டிருக்கலாம்.
ஒரு குழந்தையின் சிரிப்பை தேவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம் என்று சிலர் நம்புகிறார்கள்.
மேலும், சங்கீதம் 139:13–15 வசனங்களை வாசிக்கும் போது, தேவன் கருவிலிருந்தே மனிதனை அற்புதமாக உருவாக்கினார் என்பதால், குழந்தையின் இத்தகைய மகிழ்ச்சி வெளிப்பாடும் தேவனின் படைப்பின் அதிசயமாக இருக்கிறதோ என சிந்திக்கத் தோன்றலாம்.
ஆனால், குழந்தைகள் இவ்வாறு சிரிப்பதைக் குறித்து வேதாகமம் நேரடியாக எவ்வித தொடர்பும் காட்டவில்லை.
நமது புரிதலுக்காய், அறிவியில் ரீதியான பதிலையும் இங்கு பதிவிடுகிறேன்.
புதிய பிறந்த குழந்தைகள் தங்களுடைய தூக்க நேரத்தின் சுமார் 50% REM (Rapid Eye Movement) உறக்கத்தில் செலவிடுகின்றனர். இதை “Active Sleep” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில்:
மூளை மிகவும் செயலில் இருக்கும்
முக அசைவுகள், புன்னகை, சிரிப்பு, சுணுக்கு (twitching) போன்றவை நிகழலாம்
நரம்பு இணைப்புகள் (neural connections) உருவாகிக் கொண்டிருக்கும்
பிறந்த முதல் சில வாரங்களில் காணப்படும் இத்தகைய புன்னகை:
பிறந்த குழந்தையின் அனிச்சை புன்னகை (Neonatal Reflex Smile), தன்னிச்சையான புன்னகை (Spontaneous Smile), அல்லது உட்புற புன்னகை (Endogenous Smile) என மருத்துவத்தில் அழைக்கிறார்கள்.
இவ்வகை சிரிப்பு உணர்ச்சி சார்ந்தது அல்ல. இது ஒரு பிரதிபலிப்பு எதிர்வினை (reflex response) மாத்திரமே. அதாவது தன்னிச்சையான நரம்பு மண்டல செயல்பாடு (automatic nervous system activity) மட்டுமே.
குழந்தையின்:
மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System), உணர்ச்சி மையம் (Limbic System), மூளைத்தண்டு (Brainstem) வளர்ச்சியடையும் போது தன்னிச்சையான முக அசைவுகள் ஏற்படலாம்.
சில சமயங்களில் சிரிப்புடன் சேர்ந்து கை/கால் துடிப்பு இருந்தால், அது Benign Neonatal Sleep Myoclonus எனப்படும் ஒரு பாதிப்பு இல்லாத (harmless) தூக்க நிலையாக இருக்கலாம். ஆனால், உடல் இறுக்கம், கண்கள் நிலைத்து போதல், அல்லது அசாதாரண அசைவுகள் தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
Q&A Book ஆர்டர் செய்ய :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக