சனி, 7 பிப்ரவரி, 2026

#1230 – கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்க, போதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?

#1230 –  *கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்கபோதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?*
 
*பதில்:*
இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன்னர்பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை புரிந்துக்கொள்வது அவசியம்.
 
பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்;
பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்;
எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் பொருள்.
 
மேலே சொல்லப்பட்ட மூன்று வார்த்தைகளும் ஒரே பொறுப்பையே குறிக்கின்றன.

Pastor (போதகர்/மேய்ப்பர்) / Elder (மூப்பர்) / Bishop (கண்காணி) – இம்மூன்றும் ஒரே அர்த்தங்கள் உடையவை.
 
ஒரே பொறுப்பைக் குறிக்கும் மூன்று வெவ்வேறு வார்த்தைகளேயன்றிதனித் தனிப் பொறுப்புகளை அல்ல.
 
அப். 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பிசபையின் *“மூப்பரை”* வரவழைத்தான்.
 
அப். 20:28; ஆகையால்உங்களைக்குறித்தும்தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை *“மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக”* வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும்எச்சரிக்கையாயிருங்கள்.
 
இதன்மூலம்வேதாகமம் *“மூப்பர் – மேய்ப்பர் – கண்காணி”* என்பதை ஒரே குழுவினருக்குப் பயன்படுத்துவதை தெளிவாகக் காணலாம்.
 
மேலும்பேதுரு தனது நிருபத்தில் எழுதும் போது இந்த வார்த்தைகளை ஒரே அர்த்தத்தில் எழுதுவதை கவனிக்கவும்.
 
1பேதுரு 5:1-3 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும்கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும்இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் *“மேய்த்து”*,  கட்டாயமாய் அல்லமனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்லஉற்சாக மனதோடும்சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்லமந்தைக்கு மாதிரிகளாகவும், *“கண்காணிப்பு”* செய்யுங்கள்.
 
பாஸ்டர் / போதகர் / பிஷப் / கண்காணிஅல்லது ரபீ / ரபூனி என்பவை யூத போதனைச் சூழலில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்றாலும்அவையும் “போதனை அதிகாரம்” என்ற ஒரே கருத்தையே குறிக்கின்றன. செயல்படும் பொறுப்பின் / வேலையின் பெயர்களே.
 
*கிறிஸ்தவர்கள்மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுப்படுத்திக் காண்பிக்க இடம் இல்லை என்பதால் பட்டங்களாக எதையும் வைத்து தங்களை தனித்துவமாக்க இடமில்லை.*
 
உலகத்தார் தங்கள் வேலையைக் குறிக்கும் பட்டங்களான டாக்டர்எஞ்சினியர்கலெக்டர் போன்றுகிறிஸ்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னதாக *“ஊழியர்கனத்திற்குறிய ஊழியர்போதகர், பாஸ்டர்பிஷப்ரெவரென்டு,”* போன்ற பட்டங்களை போட்டுக்கொள்ள வேதம் அனுமதிக்கவில்லை.  வசனத்தின் படி அனைவரும் *“சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்”*.  மத். 23:8.
 
இக்காலங்களில், *“சகோதரர்”* என்ற சொல்லே கூட சில இடங்களில் ஒரு பதவியாகப் பயன்படுத்தப்படுவது போல் தோன்றுகிறது.
 
மருத்துவரை டாக்டர் என்று அழைப்பதும்கலெக்டர்இஞ்சினியர்மேனேஜர் போன்று அழைப்பது போலகுப்பை சுத்தம் செய்பவர்செறுப்பு தைப்பவர்முடி வெட்டுபவரது தொழிலை சொல்லி அழைப்பார்களோஏற்றத்தாழ்வை அங்கே அடையாளப்படுத்துவதை உணர முடிகிறதல்லவாஇதன்மூலம்சமுதாயத்தில் தொழில்கள் கூட மதிப்பீட்டின் அடிப்படையில் அழைக்கப்படுவதைக் காண்கிறோம்.
 
இப்படி எவ்வகை வித்தியாசத்தையும் காண்பிக்க கிறிஸ்தவத்தில் இடமில்லாததால் *“சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்”* என இயேசு கிறிஸ்து போதித்தார்.
 
மற்றவரை விட நம்மை எந்த வகையிலும் உயர்ந்தவராய் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது. பிலி. 2:3
 
 
மேலும்கிறிஸ்துவின் சகோதரரானயாக்கோபு மீண்டும் தன் நிரூபத்தில் அதை குறித்து எச்சரிக்கிறார். யாக். 3:1
 
 
ஏறத்தாழ 90 வயது நிரம்பிய கிழவனான யோவான் அப்போஸ்தலன் கூட உணர்ச்சி வசப்பட்டு தேவதூதனுடைய காலில் இரண்டாவது முறையும் விழ நேர்ந்தது. 
 
வெளி. 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.”
 
வெளி. 22:8-9 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோதுஇவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும்இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள் என்றான்.”
 
தனது தவறை அவர் மறைக்காமல் அப்படியே தனது நிரூபத்தில் எழுதியும் வைத்திருப்பது நமக்கு எவ்வளவு பெரிய பாடம்?
 
 போதகர் என்றும் ஆண்டவர் என்றும் கிறிஸ்து குறிக்கப்பட்டிருக்கிறார். (யோ. 13:13).

நம்மை நாமே கிறிஸ்துவிற்கு இணையாக உயர்த்திக் காண்பிக்க முடியுமோ?
 
கீழ்கண்ட வார்த்தைகளையும் கவனிப்பது நமக்கு கூடுதல் புரிதலையும் தரும்:
 
*சுவிசேஷகர்:*
"சுவிசேஷகர்" என்ற வார்த்தை போர்க்களத்திலிருந்து வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டுவரும் நபரைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நபர் என்ன செய்கிறார் என்பதைக் குறிக்க அதே வார்த்தை பயன்படுத்தப்படும்போதுஅது பெரும்பாலும் ரோமர் 1:15 இல் உள்ளதைப் போல "சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அப்படியானால்ஒரு சுவிசேஷகர் என்பது உலகிற்கு நற்செய்தியைக் கொண்டுவரும் நபர்.
 
*பிரசங்கியார்:*
சுவிசேஷகர் என்ற அதே வேலையை "பிரசங்கிப்பது" என்றும் அழைக்கப்படுகிறது.
ரோமர் 1:15-ல் ரோமில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க (சுவிசேஷம் அறிவிக்க) தான் ஆர்வமாக இருப்பதாக பவுல் கூறினார். 2கொரிந்தியர் 1:19-ல்பவுல்சில்வானுவும் மற்றும் தீமோத்தேயு ஆகியோர் கொரிந்துவில் பிரசங்கித்ததாகக் கூறினார்.
 
1தீமோத்தேயு 2:7-ல்பவுல் தான் ஒரு அப்போஸ்தலனாகவும் பிரசங்கியாகவும் நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.
 
"பிரசங்கிப்பவர்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல்ஒரு அறிவிப்பாளர் அல்லது பிரசங்கிப்பவர் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. அத்தகைய நபர் ராஜாவின் செய்திகளையும் கட்டளைகளையும் வழங்கினார்.
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை வழங்குபவர் மட்டுமே”.
 
*ஊழியர்/Minister:*
அதே வேலைக்கு மற்றொரு சொல் ஊழியம்.
ஊழியக்காரன் என்ற இந்த வார்த்தை வேலைக்காரன் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது.
 
ரோமர் 15:15-16 “அப்படியிருந்தும்சகோதரரேபுறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுதேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குநான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுதேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்."
 
எபேசியர் 3:6-7 “இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோலமுற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்”.
 
ஒரு ஊழியர் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை (ஊழியம்) செய்கிறார்.
 
*ஆசிரியர்/Teacher:*
"ஆசிரியர்" என்ற சொல் ஒரு பயிற்றுவிப்பாளரைக் குறிக்கிறது.
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.

பொதுவாக
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.
பொதுவாகதேவனது வார்த்தைகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் மக்களுக்கு  ஒரு ஆசிரியர் அறிவுறுத்துகிறார். எனவேஇது கற்பிப்பதையும் உள்ளடக்கியது.

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை எடுத்து அறிவுறுத்தி வழங்குபவர் ஆவார்”.
 
*ரபீ / போதகர்:*
ரபி என்ற எபிரேய வார்த்தைக்கு போதகர் என்று அர்த்தம். யோவான் 1:38; 3:2
போதகர் / ரபீ என்பவர் தான் சொல்லும் போதகத்திற்கு அவரே மூலமானவர்அவரே அந்த கருத்திற்கு அதிகாரிதலைவர். போதகர் என்ற சொல்போதனை அதிகாரம் கொண்டவரைக் குறித்தாலும்முழுமையான போதனை அதிகாரம் கிறிஸ்துவுக்கே உரியது.
 
*கடைசியாக:*
சமீபகாலமாககிறிஸ்துவின் சபையில் “போதகர்” என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கலாச்சாரம் உருவாகி வளர்ந்து வருகிறது. இது வேதாகமத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் அனுமதிக்கப்படக் கூடாததும்திருத்தப்பட வேண்டியதுமாகும்.
 
வேதாகமத்தின்படிமற்றவர்களைக் காட்டிலும் தங்களை உயர்த்திக் காண்பிக்கவோபட்டங்களின் மூலம் தனித்துவப்படுத்திக்கொள்ளவோ கிறிஸ்தவர்களுக்கு இடம் இல்லை.
 
அத்தகைய அடையாளப்படுத்தல்களில் விருப்பம் கொள்பவர்கள்கிறிஸ்து போதித்த தாழ்மை மற்றும் சகோதரத்துவத்தின் வழியிலிருந்து விலகிச் செல்லும் அபாயம் இருப்பதை உணர வேண்டும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
   
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டி
ய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
*Website:* http://www.kaniyakulamcoc.wordpress.com
 
*YouTube Channel:* https://www.youtube.com/joelsilsbee
-------------------------
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக